• Nov 28 2024

நீதவானின் மோசடி அம்பலம் பதவியில் இருந்து நீக்கம்

Tharun / Jun 24th 2024, 5:15 pm
image

திருகோணமலை கந்தளாய் நீதவானாக கடமையாற்றிய தினிந்து சமரசிங்கவை (Dinindu Samarasinghe) பணிநீக்கம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது பதவிக்கு பொருந்தாத வகையில் செயற்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதவான் பதவியை வகித்து வந்த போது, ​​பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டிற்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், அதன் காரணமாக அவரது கணவர் நீதவானிடம் இது தொடர்பில் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்த நீதவான், குறித்த நபர் தமக்கு கொலைமிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்புகளை விடுத்ததாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், நீதவான் தனது வீட்டிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது தொடர்பில் விசாரிப்பதற்காகவே அழைப்பொன்றை மேற்கொண்டதாக குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.   


நீதவானின் மோசடி அம்பலம் பதவியில் இருந்து நீக்கம் திருகோணமலை கந்தளாய் நீதவானாக கடமையாற்றிய தினிந்து சமரசிங்கவை (Dinindu Samarasinghe) பணிநீக்கம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர் தனது பதவிக்கு பொருந்தாத வகையில் செயற்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீதவான் பதவியை வகித்து வந்த போது, ​​பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டிற்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், அதன் காரணமாக அவரது கணவர் நீதவானிடம் இது தொடர்பில் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர், இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்த நீதவான், குறித்த நபர் தமக்கு கொலைமிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்புகளை விடுத்ததாகக் கூறியுள்ளார்.இது தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், நீதவான் தனது வீட்டிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது தொடர்பில் விசாரிப்பதற்காகவே அழைப்பொன்றை மேற்கொண்டதாக குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement