• Nov 23 2024

இரண்டாவது நாளாக தொடரும் திருமலை நகரசபை உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்...!

Sharmi / Jul 2nd 2024, 2:13 pm
image

திருகோணமலை நகராட்சி மன்ற வேலைத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று இரண்டாவது(02) நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் வீதியின் இரு பக்கமும் அமைந்திருக்கும் கடையின் ஒன்றில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபரை பொலிஸார்   கைது செய்து, நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட கடைக்கு சீல் வைக்கச் சென்ற நகரசபை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதற்கு நீதி கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(02) காலை நகரசபைக்கு முன்பாக இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த  30 ம் திகதி காலை ஆளுநரின் அறிவுறுத்தலின் பெயரில் நகரசபை செயலாளரின் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழு, தொல்பொருள் திணைக்களத்தினர், பொலிசார் ஆகியோர் திருக்கோணேஸ்வரர் ஆலய வீதியில் உள்ள குறித்த கசிப்பு வியாபாரத்தினை மேற்கொண்ட கடையினை சீல் வைத்தோம்.

அதன் பின்னர் அக்கடைக்குள் இருக்கும் சில பொருட்களை எடுக்க வேண்டும் என கடை உரிமையாளர் நகர சபை செயலாளருக்கு அறிவித்தமைக்கு அமைய செயலாளர் அப் பொருட்களை எடுத்துக் கொடுக்குமாறு தெரிவித்தார்.

அதற்கமைய அவ்விடயத்திற்கு மீண்டும் சென்று பொருட்களை எடுத்துக் கொடுக்கும் போது அவ்விடயத்தில் கூடிய சில வியாபாரிகள் சேர்ந்து நகரசபை உத்தியோகத்தர்களை  தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நகரசபை உத்தியோகத்தர் ஒருவர்  தாக்குதலுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்துடன், கடந்த சில நாட்களாக திருகோணமலை நகர சபை எல்லைக்குள் உள்ள வீதிகளில் அனுமதியற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதியோர வியாபாரங்களை அகற்றும் நடவடிக்கையினை நகரசபை மேற்கொண்டு வருகின்றது.

அதற்கும் நகரசபையின் வருமான மேற்பார்வையாளர் மற்றும் அக் குழுவினரை வீதியோர அனுமதியற்ற கடைகளை நடாத்துவோர் தாக்க முற்படும் சம்பங்களும் இடம் பெற்றுள்ளது.

எனவே, அரச ஊழியர்கள் தமது கடமைகளை செய்யும் போது இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவத்திற்கு சரியான நீதி வேண்டும் என   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்தனர்.



இரண்டாவது நாளாக தொடரும் திருமலை நகரசபை உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம். திருகோணமலை நகராட்சி மன்ற வேலைத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று இரண்டாவது(02) நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் வீதியின் இரு பக்கமும் அமைந்திருக்கும் கடையின் ஒன்றில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபரை பொலிஸார்   கைது செய்து, நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட கடைக்கு சீல் வைக்கச் சென்ற நகரசபை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதற்கு நீதி கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(02) காலை நகரசபைக்கு முன்பாக இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,கடந்த  30 ம் திகதி காலை ஆளுநரின் அறிவுறுத்தலின் பெயரில் நகரசபை செயலாளரின் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழு, தொல்பொருள் திணைக்களத்தினர், பொலிசார் ஆகியோர் திருக்கோணேஸ்வரர் ஆலய வீதியில் உள்ள குறித்த கசிப்பு வியாபாரத்தினை மேற்கொண்ட கடையினை சீல் வைத்தோம். அதன் பின்னர் அக்கடைக்குள் இருக்கும் சில பொருட்களை எடுக்க வேண்டும் என கடை உரிமையாளர் நகர சபை செயலாளருக்கு அறிவித்தமைக்கு அமைய செயலாளர் அப் பொருட்களை எடுத்துக் கொடுக்குமாறு தெரிவித்தார். அதற்கமைய அவ்விடயத்திற்கு மீண்டும் சென்று பொருட்களை எடுத்துக் கொடுக்கும் போது அவ்விடயத்தில் கூடிய சில வியாபாரிகள் சேர்ந்து நகரசபை உத்தியோகத்தர்களை  தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் நகரசபை உத்தியோகத்தர் ஒருவர்  தாக்குதலுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இத்துடன், கடந்த சில நாட்களாக திருகோணமலை நகர சபை எல்லைக்குள் உள்ள வீதிகளில் அனுமதியற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதியோர வியாபாரங்களை அகற்றும் நடவடிக்கையினை நகரசபை மேற்கொண்டு வருகின்றது. அதற்கும் நகரசபையின் வருமான மேற்பார்வையாளர் மற்றும் அக் குழுவினரை வீதியோர அனுமதியற்ற கடைகளை நடாத்துவோர் தாக்க முற்படும் சம்பங்களும் இடம் பெற்றுள்ளது.எனவே, அரச ஊழியர்கள் தமது கடமைகளை செய்யும் போது இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவத்திற்கு சரியான நீதி வேண்டும் என   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement