• Nov 17 2026

வரவு - செலவுத் திட்டத்தில் அதிருப்தி; அடுத்தடுத்து போராட்டங்களை அறிவிக்கும் தொழிற்சங்கங்கள்!

Chithra / Nov 17th 2026, 10:17 am
image


2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் தமக்கான கொடுப்பனவு அதிகரிப்புகள் மற்றும் நிவாரணங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்து, அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (17) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.


இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகங்கள், மிருகக்காட்சிசாலை திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், விலங்கு தனிமைப்படுத்தல் பிரிவுகள் உள்ளிட்ட கால்நடை வைத்தியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.


இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார்.


மேலும், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், 2027ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திப் பணிகளிலிருந்து விலகிக்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை, வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர வீரசிங்க, இம்முறை வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக சமூர்த்தித் துறைக்கு பல்வேறு நிவாரணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.


அதேநேரம், வரவு - செலவுத் திட்டத்தில் ரயில்வே சேவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.


மறுபுறம், தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணங்கள் கிடைத்துள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ. பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.


இதேவேளை கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (18) நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

வரவு - செலவுத் திட்டத்தில் அதிருப்தி; அடுத்தடுத்து போராட்டங்களை அறிவிக்கும் தொழிற்சங்கங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் தமக்கான கொடுப்பனவு அதிகரிப்புகள் மற்றும் நிவாரணங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்து, அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (17) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகங்கள், மிருகக்காட்சிசாலை திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், விலங்கு தனிமைப்படுத்தல் பிரிவுகள் உள்ளிட்ட கால்நடை வைத்தியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், 2027ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திப் பணிகளிலிருந்து விலகிக்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர வீரசிங்க, இம்முறை வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக சமூர்த்தித் துறைக்கு பல்வேறு நிவாரணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.அதேநேரம், வரவு - செலவுத் திட்டத்தில் ரயில்வே சேவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.மறுபுறம், தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணங்கள் கிடைத்துள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ. பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.இதேவேளை கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (18) நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement