• Feb 27 2025

கொழும்பில் வீட்டு வாடகை தொடர்பாக தகராறு – ஒருவர் கொலை

Tharmini / Feb 27th 2025, 10:50 am
image

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸில் உள்ள கம்பிலிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, உயிரிழந்தவர் கணவனையும் அவரது மனைவியையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயிரிழந்த நபரின் கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தைப் பறித்து, இறந்தவரைத் தாக்கியதாகவும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் சந்தேக நபரும் அவரது மனைவியும் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் வீட்டு வாடகை தொடர்பாக தகராறு – ஒருவர் கொலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸில் உள்ள கம்பிலிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, உயிரிழந்தவர் கணவனையும் அவரது மனைவியையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், உயிரிழந்த நபரின் கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தைப் பறித்து, இறந்தவரைத் தாக்கியதாகவும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவத்தில் சந்தேக நபரும் அவரது மனைவியும் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement