• May 01 2024

யாழில் கொரோனா சோதனைகளை முன்னெடுக்க வேண்டாம்- சுகாதார அமைச்சு உத்தரவு...!samugammedia

Sharmi / Apr 19th 2023, 9:54 am
image

Advertisement

கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று கொழும்பு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து போதனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கொரோனாச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

 தொடர்ந்தும் இந்தச் சோதனைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி போதனா மருத்துவமனையால் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொரோனாத் தொற்றைக் கண்டறிவதற்கான சோதனையை முன்னெடுக்கவேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரால் நேற்று 'சூம்' செயலி ஊடாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலிலும் இந்தத் தகவல் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்கள் கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறிகளைக் கொண்டிருந்தால்  அவர்களுக்கு  வேறு நோய்கள்  இனங்காணப்படாவிட்டால் மாத்திரமே கொரோனா பரிசோதனையை  மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வாய்மூலமாக அறிவுறுத்தியுள்ளது.


யாழில் கொரோனா சோதனைகளை முன்னெடுக்க வேண்டாம்- சுகாதார அமைச்சு உத்தரவு.samugammedia கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று கொழும்பு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து போதனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கொரோனாச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்தும் இந்தச் சோதனைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி போதனா மருத்துவமனையால் கோரப்பட்டிருந்தது.இந்த நிலையில், கொரோனாத் தொற்றைக் கண்டறிவதற்கான சோதனையை முன்னெடுக்கவேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரால் நேற்று 'சூம்' செயலி ஊடாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலிலும் இந்தத் தகவல் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்கள் கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறிகளைக் கொண்டிருந்தால்  அவர்களுக்கு  வேறு நோய்கள்  இனங்காணப்படாவிட்டால் மாத்திரமே கொரோனா பரிசோதனையை  மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வாய்மூலமாக அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement