• Nov 26 2024

தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் - தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை

Anaath / Aug 15th 2024, 12:19 pm
image

2024 ஆண்டுக்கான  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளின் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 

சுற்றாடல் அமைச்சின் செயலாளரின் கோரிக்கை மற்றும் 2017 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட தடையை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொத்தம் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் - தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை 2024 ஆண்டுக்கான  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளின் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, சுற்றாடல் அமைச்சின் செயலாளரின் கோரிக்கை மற்றும் 2017 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட தடையை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.இந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொத்தம் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement