• Apr 27 2024

உணவில் அதிகமாக காரம் சேர்த்துக்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Sharmi / Dec 19th 2022, 8:03 pm
image

Advertisement

பொதுவாக காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய் தான்.


நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன.


நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. இருப்பினும் இதனை அதிகம் எடுத்து கொள்வது உடலுக்கு ஆபத்தையே விளைவிக்கின்றது.உணவில் அதிகம் காரம் சேர்த்து கொள்வது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படும் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.


அதிகம் சிவப்பு மிளகாய் எடுத்து கொள்வது வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும். இது தவிர சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.


மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது வாய் புண்களுக்கு வழிவகுக்கும். வாயில் காரத்தால் வெப்பம் அதிகரிக்கிறது.அதனால், வாயில் எரிச்சல் அதன் தொடர்ச்சியாக புண்களும் ஏற்படலாம். 


சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கின்றது. அதே சமயம் காரமான உணவுகளை அதிக நேரம் சாப்பிடுபவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அதிக காரம் உடலின் நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது என மருத்துவ ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவப்பு மிளகாய் பொடியை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, முன்கூட்டிய பிரசவத்தின் அபாயம் அதிகரிக்கின்றது. மேலும் கர்ப்ப காலத்தில் சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது குழந்தைக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும்.


சிவப்பு மிளகாய் பொடியை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் புண்களை ஏற்படுத்தும். சிவப்பு மிளகாயில் அஃப்லாடாக்சின் என்ற வேதிப்பொருள் காணப்படுவதால் வயிறு, கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவில் அதிகமாக காரம் சேர்த்துக்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா பொதுவாக காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய் தான்.நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன.நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. இருப்பினும் இதனை அதிகம் எடுத்து கொள்வது உடலுக்கு ஆபத்தையே விளைவிக்கின்றது.உணவில் அதிகம் காரம் சேர்த்து கொள்வது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படும் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.அதிகம் சிவப்பு மிளகாய் எடுத்து கொள்வது வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும். இது தவிர சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது வாய் புண்களுக்கு வழிவகுக்கும். வாயில் காரத்தால் வெப்பம் அதிகரிக்கிறது.அதனால், வாயில் எரிச்சல் அதன் தொடர்ச்சியாக புண்களும் ஏற்படலாம். சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கின்றது. அதே சமயம் காரமான உணவுகளை அதிக நேரம் சாப்பிடுபவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அதிக காரம் உடலின் நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது என மருத்துவ ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவப்பு மிளகாய் பொடியை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, முன்கூட்டிய பிரசவத்தின் அபாயம் அதிகரிக்கின்றது. மேலும் கர்ப்ப காலத்தில் சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது குழந்தைக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும்.சிவப்பு மிளகாய் பொடியை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் புண்களை ஏற்படுத்தும். சிவப்பு மிளகாயில் அஃப்லாடாக்சின் என்ற வேதிப்பொருள் காணப்படுவதால் வயிறு, கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement