• Jan 07 2025

அரச தரவு கட்டமைப்பில் பாதிப்புக்களை ஏற்படுத்த திட்டமா? சைபர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Chithra / Jan 1st 2025, 9:16 am
image


அரச இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூன்றாம் தரப்பினரால் ஊடுறுவப்படுகின்றமை அரச தரவு பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். அந்த வகையில் தரவு கட்டமைப்பில் ஏதேனும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரச அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்றைய தினம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இதேவேளை பொலிஸ் திணைக்களத்தின் யூடியூப் தளமும் மூன்றாம் தரப்பினரால் ஊடுறுவப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

தரவு பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் காணப்படுகிறது. அதன் காரணமாகவே அரச இணையதளங்கள் ஊடுறுவல் போன்ற சம்பவங்கள் பதிவாகின்றன. 

இது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அதற்கமைய சில தகவல்களும் கிடைத்துள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. 

தரவு பாதுகாப்பு தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

அதேபோன்று எந்த வழியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பது குறித்த விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

அரச தரவு கட்டமைப்பில் பாதிப்புக்களை ஏற்படுத்த திட்டமா சைபர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம் அரச இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூன்றாம் தரப்பினரால் ஊடுறுவப்படுகின்றமை அரச தரவு பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். அந்த வகையில் தரவு கட்டமைப்பில் ஏதேனும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரச அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்றைய தினம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.இதேவேளை பொலிஸ் திணைக்களத்தின் யூடியூப் தளமும் மூன்றாம் தரப்பினரால் ஊடுறுவப்பட்டுள்ளது.இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது.இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,தரவு பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் காணப்படுகிறது. அதன் காரணமாகவே அரச இணையதளங்கள் ஊடுறுவல் போன்ற சம்பவங்கள் பதிவாகின்றன. இது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அதற்கமைய சில தகவல்களும் கிடைத்துள்ளன.இவ்வாறான சம்பவங்கள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. தரவு பாதுகாப்பு தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேபோன்று எந்த வழியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பது குறித்த விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

Advertisement

Advertisement

Advertisement