• Sep 17 2024

சுகாதார அமைச்சின் முக்கிய பதவிக்கு நியமிக்கப்படவுள்ள வைத்தியர் அர்ச்சுனா...! சற்றுமுன் வெளியான அறிவிப்பு...!

Sharmi / Jul 15th 2024, 1:07 pm
image

Advertisement

வடக்கு கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு விசேட வேலைத்திட்டமொன்று  எனது தலைமையில்  முன்னெடுக்கப்படவுள்ளதாக என யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

கடந்தவாரம் கொழும்பு சென்றிருந்த வைத்தியர் அர்ச்சுனா, இன்று(15) காலை மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்று  பதில் அத்தியட்சகர் ரஜீவுடன் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று காலை நான் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்று நான் கையொப்பமிடவேண்டி இருந்த கடிதங்களை பார்வையிட்டு எனது கையொப்பத்தையும் இட்டிருந்தேன்.

அதேவேளை நாளையதினம் சுகாதார அமைச்சிலிருந்து விசேட குழுவினர் வருகை தரவுள்ளதாக அறியமுடிகின்றது.

அத்துடன் அரசாங்கமும் புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை கேட்டு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் திட்ட பணிப்பாளராக என்னை நியமிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் நான் அதனை மட்டும் கோரவில்லை.

நேரடியாக அரசாங்கத்திற்கு கீழ் வராத ஏனைய வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்குரிய செயற்றிட்டங்களை அறிக்கையிடும் பணியினை முன்னெடுக்கவுள்ளேன்.

குறித்த செயற்றிட்டத்தில் திட்ட பணிப்பாளராக நான் நியமிக்கப்படும் பட்சத்தில் குறித்த செயற்றிட்டத்திற்கு செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாவும் எனது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன்.

அதேவேளை,என்னால் வைத்தியர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகின்றேன். 

அதாவது ஓரிரு கறுப்பாடுகள் நல்ல வைத்தியர்களுக்குள் வந்திருந்து வைத்திய அதிகாரிகள் சங்கம் எனும் பெயரில் பெரிய பிரச்சினையினை உருவாக்கியுள்ளார்கள்.

எனது இந்த போராட்டமானது குறித்த வைத்தியசாலையினை திருத்துவதற்கும், அழகுபடுத்துவதற்குமான போராட்டம். 

இந்நிலையில் நாளையதினம் வருகை தரவுள்ள சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினரிடம் உங்களது பிரச்சினைகளை எழுத்து மூலத்தில் ஒப்படைக்கலாம்.

அதேவேளை, எனது போராட்டம் வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. பிழைவிடும் வைத்தியர்களுக்கு எதிராகவும் வைத்தியசாலையினை மேம்படுத்துவதற்குமான போராட்டம்.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் உயர்மட்ட குழுவினர் இங்கு வருகை தரும் போது பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து வைத்தியத்துறை குறைபாடுகளை எழுத்து மூலத்தில் அவர்களிடம் கையளியுங்கள்.

அதேவேளை இந்த போராட்டமானது இதற்கு பின்னர் போராட்டமாக அமையாது. 

அத்துடன் எனது முறைப்பாடுகள் தொடர்பில் விசேட குழுவினை அமைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.








சுகாதார அமைச்சின் முக்கிய பதவிக்கு நியமிக்கப்படவுள்ள வைத்தியர் அர்ச்சுனா. சற்றுமுன் வெளியான அறிவிப்பு. வடக்கு கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு விசேட வேலைத்திட்டமொன்று  எனது தலைமையில்  முன்னெடுக்கப்படவுள்ளதாக என யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.கடந்தவாரம் கொழும்பு சென்றிருந்த வைத்தியர் அர்ச்சுனா, இன்று(15) காலை மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்று  பதில் அத்தியட்சகர் ரஜீவுடன் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அதனை தொடர்ந்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இன்று காலை நான் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்று நான் கையொப்பமிடவேண்டி இருந்த கடிதங்களை பார்வையிட்டு எனது கையொப்பத்தையும் இட்டிருந்தேன்.அதேவேளை நாளையதினம் சுகாதார அமைச்சிலிருந்து விசேட குழுவினர் வருகை தரவுள்ளதாக அறியமுடிகின்றது.அத்துடன் அரசாங்கமும் புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை கேட்டு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.குறித்த வேலைத்திட்டத்தின் திட்ட பணிப்பாளராக என்னை நியமிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் நான் அதனை மட்டும் கோரவில்லை.நேரடியாக அரசாங்கத்திற்கு கீழ் வராத ஏனைய வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்குரிய செயற்றிட்டங்களை அறிக்கையிடும் பணியினை முன்னெடுக்கவுள்ளேன்.குறித்த செயற்றிட்டத்தில் திட்ட பணிப்பாளராக நான் நியமிக்கப்படும் பட்சத்தில் குறித்த செயற்றிட்டத்திற்கு செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாவும் எனது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன்.அதேவேளை,என்னால் வைத்தியர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துகின்றேன். அதாவது ஓரிரு கறுப்பாடுகள் நல்ல வைத்தியர்களுக்குள் வந்திருந்து வைத்திய அதிகாரிகள் சங்கம் எனும் பெயரில் பெரிய பிரச்சினையினை உருவாக்கியுள்ளார்கள்.எனது இந்த போராட்டமானது குறித்த வைத்தியசாலையினை திருத்துவதற்கும், அழகுபடுத்துவதற்குமான போராட்டம். இந்நிலையில் நாளையதினம் வருகை தரவுள்ள சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினரிடம் உங்களது பிரச்சினைகளை எழுத்து மூலத்தில் ஒப்படைக்கலாம்.அதேவேளை, எனது போராட்டம் வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. பிழைவிடும் வைத்தியர்களுக்கு எதிராகவும் வைத்தியசாலையினை மேம்படுத்துவதற்குமான போராட்டம்.இந்நிலையில் சுகாதார அமைச்சின் உயர்மட்ட குழுவினர் இங்கு வருகை தரும் போது பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து வைத்தியத்துறை குறைபாடுகளை எழுத்து மூலத்தில் அவர்களிடம் கையளியுங்கள்.அதேவேளை இந்த போராட்டமானது இதற்கு பின்னர் போராட்டமாக அமையாது. அத்துடன் எனது முறைப்பாடுகள் தொடர்பில் விசேட குழுவினை அமைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement