• Feb 23 2025

குழந்தையை பிரசவித்து யன்னலால் வீசிய மாணவி, காப்பாற்றிய மருத்துவர்கள் - மட்டு வைத்தியசாலையில் கொடூரம்

Thansita / Feb 23rd 2025, 2:34 pm
image


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்து யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இது தொடர்பில் மெலும் தெரியவருகையில்

உயர் தரத்தில் கல்விகற்று வரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கற்பிணியான இவர் கற்பிணி என தெரிவிக்காது வைற்றுவலி என மட்டு போதன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவரை சரியான முறையில் வைத்தியர் சோதனையிடாது அவரது சலத்தை எடுத்து சோதனையிட்டு வயிற்று வலிக்கான ஊசி மூலமாக வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது 

இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த நோயாளி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்து யன்னல் வழியாக வீசியுள்ளார்.

குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்துள்ளார் என அவர்களுக்கு தெரியவந்ததையடுத்து வீசிய குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். 

இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையை பிரசவித்து யன்னலால் வீசிய மாணவி, காப்பாற்றிய மருத்துவர்கள் - மட்டு வைத்தியசாலையில் கொடூரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்து யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் மெலும் தெரியவருகையில்உயர் தரத்தில் கல்விகற்று வரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கற்பிணியான இவர் கற்பிணி என தெரிவிக்காது வைற்றுவலி என மட்டு போதன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவரை சரியான முறையில் வைத்தியர் சோதனையிடாது அவரது சலத்தை எடுத்து சோதனையிட்டு வயிற்று வலிக்கான ஊசி மூலமாக வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த நோயாளி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்து யன்னல் வழியாக வீசியுள்ளார்.குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்துள்ளார் என அவர்களுக்கு தெரியவந்ததையடுத்து வீசிய குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement