• Sep 20 2024

பதுளையில் மருத்துவர்கள் எதிர்ப்பு போராட்டம்!!

Tamil nila / Jan 3rd 2023, 8:23 am
image

Advertisement

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஸ்ட வைத்திய அதிகாரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித ராஜபக்ஸ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக, பதுளை பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர் குழாமினர் நேற்று (2) அமைதிப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


நேற்று முன்தினம் (1) தன்னுயிரை மாய்த்துக்கொண்ட யுவதி ஒருவர், பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், குறித்த யுவதியை வைத்தியசாலைக்கு தாமதித்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதால் காப்பாற்ற முடியாமல் போனதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.


இதன்போது வைத்தியசாலைக்குள் புகுந்த கும்பலொன்று அமைதியின்மையாக நடந்துக்கொண்டதுடன், தன்னை தாக்கியதாகவும் வைத்தியர் பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த நிலையில், வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தே இந்த எதிர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பதுளையில் மருத்துவர்கள் எதிர்ப்பு போராட்டம் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஸ்ட வைத்திய அதிகாரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித ராஜபக்ஸ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக, பதுளை பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர் குழாமினர் நேற்று (2) அமைதிப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.நேற்று முன்தினம் (1) தன்னுயிரை மாய்த்துக்கொண்ட யுவதி ஒருவர், பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், குறித்த யுவதியை வைத்தியசாலைக்கு தாமதித்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதால் காப்பாற்ற முடியாமல் போனதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.இதன்போது வைத்தியசாலைக்குள் புகுந்த கும்பலொன்று அமைதியின்மையாக நடந்துக்கொண்டதுடன், தன்னை தாக்கியதாகவும் வைத்தியர் பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நிலையில், வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தே இந்த எதிர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement