• Mar 13 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

Chithra / Mar 11th 2025, 2:06 pm
image


  

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார்.

பின்னர் மாலை 6:30 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் அவரின் தங்குமிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு   அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார்.பின்னர் மாலை 6:30 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் அவரின் தங்குமிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement