• Apr 27 2024

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

Chithra / Feb 9th 2023, 10:11 am
image

Advertisement

புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) காலை 8.00 மணியுடன் குறித்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தில் விசேட வைத்தியர்கள், அரச பல் வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு மற்றும் உதவி வைத்தியர்கள் உட்பட அனைத்து வைத்தியர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக துறைமுக சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) காலை 8.00 மணியுடன் குறித்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.குறித்த போராட்டத்தில் விசேட வைத்தியர்கள், அரச பல் வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு மற்றும் உதவி வைத்தியர்கள் உட்பட அனைத்து வைத்தியர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.இதேவேளை அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக துறைமுக சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement