• Nov 24 2024

மூன்றாவது முறையாக குறிவைக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ; ஆயுதத்துடன் சிக்கிய நபர்

Tharmini / Oct 14th 2024, 12:20 pm
image

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீதான கொலை முயற்சி மீண்டும் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 3வது முறையாக, டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயற்சி நடந்துள்ளது.

காவல்துறையினர் விசாரணை 

இரண்டு மாதங்களுக்கு முதல்முறையாக, பென்சில்வேனியாவில் கடந்த ஜூலை 13ல் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றபோது, டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் காயம் ஏற்பட்டது.

2வது முறையாக, செப்டம்பர் மாதம் புளோரிடா மாகாணம் வெஸ்ட் பாம் பீச் பகுதியில் உள்ள தன் கோல்ப் கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே, டிரம்பை குறிவைத்து துப்பாக்கியால் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். ரகசிய காவல்துறை கவனித்து ஹவாயைச் சேர்ந்த ரயான் வெஸ்லே ரோத், 58, என்ற அந்த நபரை கைது செய்தனர்.

இந்நிலையிலேயே, அமெரிக்கா, கோசெல்லாவில் நடந்த பிரசார கூட்டத்தில் நபரொருவரை துப்பாக்கியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.49 வயதான வெம் மில்லர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிகின்றன.


மூன்றாவது முறையாக குறிவைக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ; ஆயுதத்துடன் சிக்கிய நபர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீதான கொலை முயற்சி மீண்டும் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எனினும், டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 3வது முறையாக, டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயற்சி நடந்துள்ளது.காவல்துறையினர் விசாரணை இரண்டு மாதங்களுக்கு முதல்முறையாக, பென்சில்வேனியாவில் கடந்த ஜூலை 13ல் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றபோது, டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் காயம் ஏற்பட்டது.2வது முறையாக, செப்டம்பர் மாதம் புளோரிடா மாகாணம் வெஸ்ட் பாம் பீச் பகுதியில் உள்ள தன் கோல்ப் கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே, டிரம்பை குறிவைத்து துப்பாக்கியால் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். ரகசிய காவல்துறை கவனித்து ஹவாயைச் சேர்ந்த ரயான் வெஸ்லே ரோத், 58, என்ற அந்த நபரை கைது செய்தனர்.இந்நிலையிலேயே, அமெரிக்கா, கோசெல்லாவில் நடந்த பிரசார கூட்டத்தில் நபரொருவரை துப்பாக்கியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.49 வயதான வெம் மில்லர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிகின்றன.

Advertisement

Advertisement

Advertisement