• Apr 30 2024

காரைநகர் பாடசாலைகளுக்கு வர்ண கழிவுத் தொட்டிகள் கையளிப்பு...!samugammedia

Sharmi / Oct 11th 2023, 3:29 pm
image

Advertisement

"பசுமை படைத்த நமது உலகினை குப்பையில்லா நகரமாக்க திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை சிறுவர்களிடத்து இருந்து ஆரம்பிப்போம்" என்னும் எண்ணக்கருவிற்கு அமைய காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு வர்ணக்கழிவுத் தொட்டிகள் இன்று(11) காரைநகர் பிரதேச சபையின் செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் திண்மக்கழிவு முகாமைத்துவம் பேரிடராக காணப்படுகின்றது. எனவே சபையின் செயற்பாட்டில் திண்மக்கழிவுச் செயற்பாடு முக்கிய துறையாக இருப்பதால் முறையான திண்மக்கழிவினை தரம் பிரிப்பதன் மூலம் கழிவகற்றலை இலகுபடுத்த முடியும்.

எனவே மாணவர்களிடையே திண்மக்கழிவினை ஊக்கப்படுத்துதன் மூலம் சமூகரீதியாகவும் மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியும். அந்த வகையில் திண்மக்கழிவுச் செயற்பாட்டினை பாடசாலை மட்டத்தில் பரீட்சாத்தமான முறையில் முன்னெடுப்பதற்கு இவ் செயற்றிட்டம் பங்கு வகிக்கின்றது.

இச் செயற்பாட்டிற்கு காரைநகர் பிரதேச சபையின் பூரண நிதிப் பங்களிப்பின் மூலம் வழங்கப்பட்டது.

இதேவேளை இந்த கழிவுத் தொட்டி வழங்கல் செயற்பாடு பாடசாலை சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காரைநகர் பாடசாலைகளுக்கு வர்ண கழிவுத் தொட்டிகள் கையளிப்பு.samugammedia "பசுமை படைத்த நமது உலகினை குப்பையில்லா நகரமாக்க திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை சிறுவர்களிடத்து இருந்து ஆரம்பிப்போம்" என்னும் எண்ணக்கருவிற்கு அமைய காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு வர்ணக்கழிவுத் தொட்டிகள் இன்று(11) காரைநகர் பிரதேச சபையின் செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் திண்மக்கழிவு முகாமைத்துவம் பேரிடராக காணப்படுகின்றது. எனவே சபையின் செயற்பாட்டில் திண்மக்கழிவுச் செயற்பாடு முக்கிய துறையாக இருப்பதால் முறையான திண்மக்கழிவினை தரம் பிரிப்பதன் மூலம் கழிவகற்றலை இலகுபடுத்த முடியும். எனவே மாணவர்களிடையே திண்மக்கழிவினை ஊக்கப்படுத்துதன் மூலம் சமூகரீதியாகவும் மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியும். அந்த வகையில் திண்மக்கழிவுச் செயற்பாட்டினை பாடசாலை மட்டத்தில் பரீட்சாத்தமான முறையில் முன்னெடுப்பதற்கு இவ் செயற்றிட்டம் பங்கு வகிக்கின்றது. இச் செயற்பாட்டிற்கு காரைநகர் பிரதேச சபையின் பூரண நிதிப் பங்களிப்பின் மூலம் வழங்கப்பட்டது. இதேவேளை இந்த கழிவுத் தொட்டி வழங்கல் செயற்பாடு பாடசாலை சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement