• May 02 2024

இங்கு வர வேண்டாம்...! வெளிநாடொன்றில் இருந்து இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Aug 29th 2023, 9:15 pm
image

Advertisement

மனித கடத்தல்காரர்களுக்கு பலியாகாமல், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்கு வர வேண்டாம் என இலங்கையர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ராயல் ஓமான் பொலிஸாரின் குடிவரவுத் திணைக்களம் ஆகியன இணைந்து, அங்கு சிக்கித் தவித்த 32 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 2023, ஆகஸ்ட் 17 அன்று திருப்பி அனுப்ப உதவியதாக தூதரகம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைந்தனர், பின்னர் சரியான வேலைவாய்ப்பைப் பெறாமல், விசா காலம் முடிந்த பின்னரும் ஓமானில் தங்கியிருந்த நிலையிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 2022 நவம்பர் முதல் இன்றுவரை ஓமானிய அதிகாரிகளின் ஆதரவுடன் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இன்றி வருகை/சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வர வேண்டாம் என்றும் தூதரகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

எனவே, அனைத்து இலங்கையர்களையும் உரிமம் பெற்ற முகவர்கள் மூலம் மட்டுமே தொழில்களை தேடுமாறும் ஓமானுக்கு வருவதற்கு முன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில், தம்மை பதிவு செய்யுமாறும் தூதரகம் கோரியுள்ளது.


இங்கு வர வேண்டாம். வெளிநாடொன்றில் இருந்து இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia மனித கடத்தல்காரர்களுக்கு பலியாகாமல், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்கு வர வேண்டாம் என இலங்கையர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ராயல் ஓமான் பொலிஸாரின் குடிவரவுத் திணைக்களம் ஆகியன இணைந்து, அங்கு சிக்கித் தவித்த 32 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 2023, ஆகஸ்ட் 17 அன்று திருப்பி அனுப்ப உதவியதாக தூதரகம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.அவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைந்தனர், பின்னர் சரியான வேலைவாய்ப்பைப் பெறாமல், விசா காலம் முடிந்த பின்னரும் ஓமானில் தங்கியிருந்த நிலையிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் 2022 நவம்பர் முதல் இன்றுவரை ஓமானிய அதிகாரிகளின் ஆதரவுடன் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில், ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இன்றி வருகை/சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வர வேண்டாம் என்றும் தூதரகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.எனவே, அனைத்து இலங்கையர்களையும் உரிமம் பெற்ற முகவர்கள் மூலம் மட்டுமே தொழில்களை தேடுமாறும் ஓமானுக்கு வருவதற்கு முன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில், தம்மை பதிவு செய்யுமாறும் தூதரகம் கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement