• Jan 22 2025

கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர்ந்தும் செய்ய வேண்டாம்- பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

Tharmini / Dec 22nd 2024, 2:46 pm
image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி அரசியல் செய்ய முடியும் என்ற கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர்ந்தும் செய்ய வேண்டாம்- வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா. 

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ரோஹிங்கிய பிரஜைகளுக்கு அரசாங்கம் எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என சில அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவேற்றியிருந்தனர்.

இது குறித்து, இன்று (22) அந்த அகதிகள் தங்கியிருக்கின்ற திருகோணமலை, ஜமாளியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் வைத்து, இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவர்கள் சட்ட விரோத குடிவரவாளர்கள். 

எனினும் நாங்கள் மனிதாபிமான முறையில் இவர்களை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அத்தோடு, இவர்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வருகின்றோம்.

இவர்களுடைய பிரச்சினை உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சனையாகும் ஆகும். 

இவற்றை அரசாங்கம் மிகச் சிறப்பாக அணுகி வருகின்றது என்பதை குற்றம் சுமத்துபவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்.

உணவு உடை சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கச்சிதமாக செய்து கொண்டு வருகின்றோம். 

துறைமுகத்தில் வைத்தே நடமாடும் சுகாதார முகாம் அமைத்து அவர்களுடைய உடல் நிலையில் கவனம் செலுத்தப்பட்டது. 

சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு பிரிவினர், வெளிவிவகார அமைச்சு மற்றும் பல்வேறு தரப்பட்ட துறைகள் ஒன்றாக சேர்ந்து, அகதிகள் விடயத்தை கையாளுவதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்றோம். 

சட்டத்தின் பிரகாரம், தற்போது இடைத்தங்கல் முகாமில் மியன்மார் 103 பிரஜைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநேரத்தில், அகதிகளை வைத்து தமது சுய அரசியலாக லாபத்துக்காக சில அரசியல்வாதிகள் இயங்கி வருவதையும் அவதானித்து வருகின்றோம். இவற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஒரு பாரிய விடயத்தினை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் ஒரு சில குறைபாடுகள் எழலாம். 

நாட்டைப் பொறுத்தவரை இது ஒரு புதிய அனுபவம். எனினும் அரசாங்கம் இந்த விடயத்தை அனுகுவதற்கான திறமையினையும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றது 

அரசியல்வாதிகள் உதவி செய்ய வேண்டுமாக இருந்தால் நீங்கள், அதனை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக செய்ய முடியும். அரசியல் செய்கின்ற சூழல் இதுவல்ல.

எந்த வேறுபாடுகளும் இன்றி மனிதாபிமான அடிப்படையிலே அகதிகளுடைய விடயங்கள் கையாளப்படுகின்றன. 

அரசியலில் கால்புணர்ச்சி கொண்டவர்களும், தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தவர்களும் பொய்யான குற்றச்சாட்டுகளை இந்த விடயத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

மக்கள் இரு முறை இந்த அரசியல்வாதிகளை இனங்காட்டி தந்து விட்டார்கள். இனியும் ஏமாற வேண்டாம்.  

எனவே, இப்படியானவர்கள் நிவாரணங்களையும் பொதிகளையும் வழங்கி இனியும் அரசியல் செய்ய முடியும் என்ற நப்பாசையை அவர்கள், இனியாவது கைவிட வேண்டும் 

அகதிகள் நாளை அல்லது நாளை மறுதினம் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

அதன் பிறகு இவர்கள் விவகாரம் தொடர்பாக, அந்தத் திணைக்களத்தினால் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர்ந்தும் செய்ய வேண்டாம்- பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மக்களுக்கு நிவாரணம் வழங்கி அரசியல் செய்ய முடியும் என்ற கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர்ந்தும் செய்ய வேண்டாம்- வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ரோஹிங்கிய பிரஜைகளுக்கு அரசாங்கம் எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என சில அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவேற்றியிருந்தனர்.இது குறித்து, இன்று (22) அந்த அகதிகள் தங்கியிருக்கின்ற திருகோணமலை, ஜமாளியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் வைத்து, இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவர்கள் சட்ட விரோத குடிவரவாளர்கள். எனினும் நாங்கள் மனிதாபிமான முறையில் இவர்களை ஏற்றுக் கொண்டுள்ளோம்.அத்தோடு, இவர்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வருகின்றோம்.இவர்களுடைய பிரச்சினை உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சனையாகும் ஆகும். இவற்றை அரசாங்கம் மிகச் சிறப்பாக அணுகி வருகின்றது என்பதை குற்றம் சுமத்துபவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்.உணவு உடை சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கச்சிதமாக செய்து கொண்டு வருகின்றோம். துறைமுகத்தில் வைத்தே நடமாடும் சுகாதார முகாம் அமைத்து அவர்களுடைய உடல் நிலையில் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு பிரிவினர், வெளிவிவகார அமைச்சு மற்றும் பல்வேறு தரப்பட்ட துறைகள் ஒன்றாக சேர்ந்து, அகதிகள் விடயத்தை கையாளுவதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்றோம். சட்டத்தின் பிரகாரம், தற்போது இடைத்தங்கல் முகாமில் மியன்மார் 103 பிரஜைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்தநேரத்தில், அகதிகளை வைத்து தமது சுய அரசியலாக லாபத்துக்காக சில அரசியல்வாதிகள் இயங்கி வருவதையும் அவதானித்து வருகின்றோம். இவற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பாரிய விடயத்தினை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் ஒரு சில குறைபாடுகள் எழலாம். நாட்டைப் பொறுத்தவரை இது ஒரு புதிய அனுபவம். எனினும் அரசாங்கம் இந்த விடயத்தை அனுகுவதற்கான திறமையினையும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றது அரசியல்வாதிகள் உதவி செய்ய வேண்டுமாக இருந்தால் நீங்கள், அதனை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக செய்ய முடியும். அரசியல் செய்கின்ற சூழல் இதுவல்ல.எந்த வேறுபாடுகளும் இன்றி மனிதாபிமான அடிப்படையிலே அகதிகளுடைய விடயங்கள் கையாளப்படுகின்றன. அரசியலில் கால்புணர்ச்சி கொண்டவர்களும், தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தவர்களும் பொய்யான குற்றச்சாட்டுகளை இந்த விடயத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் இரு முறை இந்த அரசியல்வாதிகளை இனங்காட்டி தந்து விட்டார்கள். இனியும் ஏமாற வேண்டாம்.  எனவே, இப்படியானவர்கள் நிவாரணங்களையும் பொதிகளையும் வழங்கி இனியும் அரசியல் செய்ய முடியும் என்ற நப்பாசையை அவர்கள், இனியாவது கைவிட வேண்டும் அகதிகள் நாளை அல்லது நாளை மறுதினம் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அதன் பிறகு இவர்கள் விவகாரம் தொடர்பாக, அந்தத் திணைக்களத்தினால் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement