• Sep 21 2024

புலனாய்வு பிரிவினை கொண்டு மக்கள் நலனுக்காக போராடுபவர்களை நசுக்க வேண்டாம்! க.மு.தம்பிராசா samugammedia

Chithra / Jun 6th 2023, 6:36 pm
image

Advertisement

மக்களினுடைய நல்வாழ்விற்கு போராடும் அரசியல் கட்சிகளையும் மக்கள் அமைப்பினையும் புலனாய்வு பிரிவினை கொண்டு நசுசக்கவேண்டாம் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் க.மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக உரிமைகளுக்காக போராடுகின்ற அமைப்புகளை மறுத்து அவர்கள் மீதான அடக்குமுறைகளை தொடருகின்ற பொலிஸாரின் அடக்குமுறை நிறுத்தப்படவேண்டும்.

வடகிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற பொலிஸாரின் திட்டமிட்ட அத்துமீறல்களை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மிக அண்மையில் மருதங்கேணியில் ஒரு போராட்டத்திற்கு பங்குபற்றிய ஒருகட்சியின் மகளிர் அணித்தலைவியும் அதேபோல் இன்னுமொரு ஆண் உட்பட இருவர் மருதங்கேணி பொலிஸாரை கடமை செய்யவிடாமல் தடுத்தார்கள் எனக் கூறி அவர்களை கைது செய்துள்ளார்கள்.

தேர்தல் கடமைகளுக்கு செல்லுகின்ற அனைத்து பொலிஸாரும் தங்களுடைய பொலிஸ் உடையை அணிந்துதான் செல்கின்றார்கள்.

ஆகவே இங்கு எதற்காக சிவில் உடையில் செல்லவேண்டும். இங்கே புலனாய்வாளார்கள் யாரை புலனாய்வு செய்கின்றார்கள்?

அரசுக்கு எதிராக செயல்படுகின்ற அல்லது தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகின்ற மக்களை அச்சுறுத்தவே புலனாய்வாளர்கள் வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்றார்கள்.

அன்று வடமகாணத்தினை அச்சுறுத்திய கிறிஸ் மனிதன் புலனாய்வாளர்களின் வேலையாக தான் மக்களால் பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு தடவை எங்களுடைய மக்களின் போராட்டத்தை எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக அரசாங்கம் கிறீஸ் மனிதன், ஆவா குழு, வாள்வெட்டு கும்பல்கள் என இவற்றுக்கு பின்னால் அரச புலனாய்வாளர்கள் தான் செயற்படுகின்றார்கள் என வடக்கிழக்கு வாழ் தமிழர்களும் சந்தேகிக்கின்றார்கள்.

எமது மக்கள் உரிமைகளுக்காக போராடுகின்ற அரசியல் கட்சிகளாக இருக்கட்டும் அமைப்புக்களாக இருக்கலாம் அவர்கள் வேண்டுமென்றே பொலிஸாரின் கடமைகளை தடை செய்தார்கள் என்று வர்ணனை செய்கின்றது அரசு.

ஆனால் பரீட்சை நிலையத்தில் பாதுகாப்பு வழங்கும் பொலிஸார் எங்கே இருக்க வேண்டும் பரீட்சை மண்டபத்தில் தானே எவ்வாறு அவர்கள் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தர முடியும்.

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை நசுக்குவதற்காக இந்த புலனாய்வாளர்கள் ஏவி விடப்படுகின்றார்கள். எங்களுடைய மக்களையும் அதிகமான பணத்தினை வழங்கி புலனாய்வாளர்கள் பயன்படுத்துகின்றார்கள்.

தமிழ் தேசியப்பரப்பில் செயற்படுகின்ற அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அரசியல் சார் தீர்வுகளுக்கான அமைப்புகள் மீதும் புலனாய்வு செய்ய வேண்டிய தேவை அரசுக்கு இல்லை.

ஏனென்றால் அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்காக எத்தனையோ கோடி ரூபாய் கொடுத்து சிலரை நீங்கள் கொள்வனவு செய்து வைத்துள்ளீர்கள்.

ஆகவே அரசியல் கட்சிகளை அச்சுறுத்தாதீர்கள் மக்கள் சார் சிவில் அமைப்புகளை அச்சுறுத்தாதீர்கள் தமிழ் மக்களினுடைய இறைமையை கேள்விக்குட்படுத்தாதீர்கள் மக்களினுடைய நல்வாழ்வு சார்ந்த எந்த ஒரு அமைப்பினையும் அச்சுறுத்த வேண்டாம். என தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவினை கொண்டு மக்கள் நலனுக்காக போராடுபவர்களை நசுக்க வேண்டாம் க.மு.தம்பிராசா samugammedia மக்களினுடைய நல்வாழ்விற்கு போராடும் அரசியல் கட்சிகளையும் மக்கள் அமைப்பினையும் புலனாய்வு பிரிவினை கொண்டு நசுசக்கவேண்டாம் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் க.மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனநாயக உரிமைகளுக்காக போராடுகின்ற அமைப்புகளை மறுத்து அவர்கள் மீதான அடக்குமுறைகளை தொடருகின்ற பொலிஸாரின் அடக்குமுறை நிறுத்தப்படவேண்டும்.வடகிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற பொலிஸாரின் திட்டமிட்ட அத்துமீறல்களை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.மிக அண்மையில் மருதங்கேணியில் ஒரு போராட்டத்திற்கு பங்குபற்றிய ஒருகட்சியின் மகளிர் அணித்தலைவியும் அதேபோல் இன்னுமொரு ஆண் உட்பட இருவர் மருதங்கேணி பொலிஸாரை கடமை செய்யவிடாமல் தடுத்தார்கள் எனக் கூறி அவர்களை கைது செய்துள்ளார்கள்.தேர்தல் கடமைகளுக்கு செல்லுகின்ற அனைத்து பொலிஸாரும் தங்களுடைய பொலிஸ் உடையை அணிந்துதான் செல்கின்றார்கள்.ஆகவே இங்கு எதற்காக சிவில் உடையில் செல்லவேண்டும். இங்கே புலனாய்வாளார்கள் யாரை புலனாய்வு செய்கின்றார்கள்அரசுக்கு எதிராக செயல்படுகின்ற அல்லது தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகின்ற மக்களை அச்சுறுத்தவே புலனாய்வாளர்கள் வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்றார்கள்.அன்று வடமகாணத்தினை அச்சுறுத்திய கிறிஸ் மனிதன் புலனாய்வாளர்களின் வேலையாக தான் மக்களால் பார்க்கப்படுகிறது.இவ்வாறு ஒவ்வொரு தடவை எங்களுடைய மக்களின் போராட்டத்தை எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக அரசாங்கம் கிறீஸ் மனிதன், ஆவா குழு, வாள்வெட்டு கும்பல்கள் என இவற்றுக்கு பின்னால் அரச புலனாய்வாளர்கள் தான் செயற்படுகின்றார்கள் என வடக்கிழக்கு வாழ் தமிழர்களும் சந்தேகிக்கின்றார்கள்.எமது மக்கள் உரிமைகளுக்காக போராடுகின்ற அரசியல் கட்சிகளாக இருக்கட்டும் அமைப்புக்களாக இருக்கலாம் அவர்கள் வேண்டுமென்றே பொலிஸாரின் கடமைகளை தடை செய்தார்கள் என்று வர்ணனை செய்கின்றது அரசு.ஆனால் பரீட்சை நிலையத்தில் பாதுகாப்பு வழங்கும் பொலிஸார் எங்கே இருக்க வேண்டும் பரீட்சை மண்டபத்தில் தானே எவ்வாறு அவர்கள் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தர முடியும்.ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை நசுக்குவதற்காக இந்த புலனாய்வாளர்கள் ஏவி விடப்படுகின்றார்கள். எங்களுடைய மக்களையும் அதிகமான பணத்தினை வழங்கி புலனாய்வாளர்கள் பயன்படுத்துகின்றார்கள்.தமிழ் தேசியப்பரப்பில் செயற்படுகின்ற அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அரசியல் சார் தீர்வுகளுக்கான அமைப்புகள் மீதும் புலனாய்வு செய்ய வேண்டிய தேவை அரசுக்கு இல்லை.ஏனென்றால் அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்காக எத்தனையோ கோடி ரூபாய் கொடுத்து சிலரை நீங்கள் கொள்வனவு செய்து வைத்துள்ளீர்கள்.ஆகவே அரசியல் கட்சிகளை அச்சுறுத்தாதீர்கள் மக்கள் சார் சிவில் அமைப்புகளை அச்சுறுத்தாதீர்கள் தமிழ் மக்களினுடைய இறைமையை கேள்விக்குட்படுத்தாதீர்கள் மக்களினுடைய நல்வாழ்வு சார்ந்த எந்த ஒரு அமைப்பினையும் அச்சுறுத்த வேண்டாம். என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement