• Nov 24 2024

லெபனான் செல்ல வேண்டாம்! இலங்கையர்களுக்கு வந்த அவசர அறிவுறுத்தல்

Chithra / Aug 2nd 2024, 11:23 am
image


அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.

லெபனானில் சுமார் 6,000 இலங்கையர்கள்  தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார் நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

லெபனான் செல்ல வேண்டாம் இலங்கையர்களுக்கு வந்த அவசர அறிவுறுத்தல் அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.லெபனானில் சுமார் 6,000 இலங்கையர்கள்  தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார் நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement