• Nov 24 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம்! - விசேட அறிக்கையில் ரணில்

Chithra / Oct 25th 2024, 8:52 am
image


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,

அல்விஸ் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனிவிரட்ணவையோ சிஜடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவையோ பழிவாங்கும் நோக்கில் தயாரிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின்போதே அந்த அறிக்கை எனக்கு கிடைத்தது.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்தும் விருப்பம் இல்லாததால் நான் அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை.

ஏ.எம்.ஜே.டி அல்விஸ் தலைமையிலான குழுவில் தனிப்பட்ட வகையில் எனக்கு பழக்கப்பட்டவர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த குழு நியமனத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. 

நாட்டில் பயங்கரவாத தாக்குதலொன்று இடம்பெறவுள்ளதாக இந்திய புலனாய்வு தகவல் கிடைத்தும் முறையான நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் விசாரணை செய்யும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டது. 

மேலும் அந்த தகவல் தொடர்பில் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் விசாரணை செய்வதும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த இன்னுமொரு கடமையாகும். 

வவுணத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை  கொலை செய்தது விடுதலைப் புலிகளே என அரச புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நான்கு மாதங்களாக அறிவித்தது ஏன்?

அப்போது அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கேட்டறிந்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லதீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கை மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவேஇ இது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை என்ற விளக்கம் அடிப்படையற்றது என்பது மிகவும் தெளிவாகும். என தெரிவித்தார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - விசேட அறிக்கையில் ரணில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,அல்விஸ் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனிவிரட்ணவையோ சிஜடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவையோ பழிவாங்கும் நோக்கில் தயாரிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலின்போதே அந்த அறிக்கை எனக்கு கிடைத்தது.எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்தும் விருப்பம் இல்லாததால் நான் அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை.ஏ.எம்.ஜே.டி அல்விஸ் தலைமையிலான குழுவில் தனிப்பட்ட வகையில் எனக்கு பழக்கப்பட்டவர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த குழு நியமனத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. நாட்டில் பயங்கரவாத தாக்குதலொன்று இடம்பெறவுள்ளதாக இந்திய புலனாய்வு தகவல் கிடைத்தும் முறையான நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் விசாரணை செய்யும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டது. மேலும் அந்த தகவல் தொடர்பில் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் விசாரணை செய்வதும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த இன்னுமொரு கடமையாகும். வவுணத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை  கொலை செய்தது விடுதலைப் புலிகளே என அரச புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நான்கு மாதங்களாக அறிவித்தது ஏன்அப்போது அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கேட்டறிந்தது.முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லதீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கை மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.எனவேஇ இது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை என்ற விளக்கம் அடிப்படையற்றது என்பது மிகவும் தெளிவாகும். என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement