• Aug 10 2025

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்! பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை

Chithra / Aug 10th 2025, 4:04 pm
image

நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார். 

மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே, இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் கருத்து வௌியிட்ட அவர், 

பிள்ளைகளின் திறன்கள் வேறுபட்டவை, எனவே பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இன்று பரீட்சையில் மாணவர்கள் என்ன எழுதினார்கள் என்று கேட்டு? அவர்கள் தவறான பதில் எழுதினால், அவர்களை திட்டவோ தண்டிக்கவோ வேண்டாம். 

அவர்கள் சரியான பதில் எழுதினாலும் சரி, தவறான பதில் எழுதினாலும் சரி, அந்த நேரத்தில் பிள்ளைகள் வினாத்தாளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.

அதனால் புலமைப் பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.


புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார். மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே, இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். மேலும் கருத்து வௌியிட்ட அவர், பிள்ளைகளின் திறன்கள் வேறுபட்டவை, எனவே பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இன்று பரீட்சையில் மாணவர்கள் என்ன எழுதினார்கள் என்று கேட்டு அவர்கள் தவறான பதில் எழுதினால், அவர்களை திட்டவோ தண்டிக்கவோ வேண்டாம். அவர்கள் சரியான பதில் எழுதினாலும் சரி, தவறான பதில் எழுதினாலும் சரி, அந்த நேரத்தில் பிள்ளைகள் வினாத்தாளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.அதனால் புலமைப் பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Advertisement

Advertisement

Advertisement