• May 20 2024

திலீபனின் தியாகத்தை அரசியல் இலாபங்களுக்காக கொச்சைப்படுத்தாதீர்கள்...! பிரபா வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Sep 20th 2023, 4:58 pm
image

Advertisement

அரசியல் இலாபங்களுக்காக திலீபனின் தியாகத்தினை கொச்சைப்படுத்துகின்றீர்கள் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண தமிழ் மகனுக்கு பாதுகாப்பு இல்லையென்பது விளங்குகின்றது. அதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் சொல்வதை சரியென்று சொல்லவரவில்லை.

திலீபன் என்பவர் உலகத்திலேயே ஒரு உன்னதமான தியாகத்தினை செய்த மாமனிதன்.தமிழ் மக்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணித்த ஒரு மனிதன்.

அந்த தியாகத்தினை உங்களது அரசியல் இலாபங்களுக்காக கொச்சைப்படுத்துகின்றீர்கள்.

இன்று வீதிவீதியாக அவரை கொண்டு திரிகின்றீர்கள்.தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்.உங்கள் அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு இனத் துவேசத்தினை கக்கி மக்களை பிரிவுபடுத்த வரவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

திலீபனின் தியாகத்தை அரசியல் இலாபங்களுக்காக கொச்சைப்படுத்தாதீர்கள். பிரபா வேண்டுகோள்.samugammedia அரசியல் இலாபங்களுக்காக திலீபனின் தியாகத்தினை கொச்சைப்படுத்துகின்றீர்கள் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண தமிழ் மகனுக்கு பாதுகாப்பு இல்லையென்பது விளங்குகின்றது. அதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் சொல்வதை சரியென்று சொல்லவரவில்லை.திலீபன் என்பவர் உலகத்திலேயே ஒரு உன்னதமான தியாகத்தினை செய்த மாமனிதன்.தமிழ் மக்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணித்த ஒரு மனிதன்.அந்த தியாகத்தினை உங்களது அரசியல் இலாபங்களுக்காக கொச்சைப்படுத்துகின்றீர்கள்.இன்று வீதிவீதியாக அவரை கொண்டு திரிகின்றீர்கள்.தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்.உங்கள் அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு இனத் துவேசத்தினை கக்கி மக்களை பிரிவுபடுத்த வரவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement