• Apr 26 2024

தாகம் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம் - வெப்பமான காலநிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 27th 2023, 9:22 am
image

Advertisement

இலங்கையில் வெப்பமான காலநிலை காரணமாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாக, மக்கள் தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவுவதே இந்த கோரிக்கை விடுப்பதற்கு காரணமாகும்.

பல மாவட்டங்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை வெப்பம் நிலவினாலும், அதை விட மனித உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டின் வெப்பமான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மழை கிடைக்கப்பெறும் நிலையில், வெப்பம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆரம்பத்தில் காணப்பட்ட வெப்பநிலை தற்போது சிறியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் வெப்பநிலை குறைவடையவில்லை.

மழைவீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரிக்குமானால், வெப்பநிலை அடுத்த மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர் குறைவடையும் என அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


தாகம் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம் - வெப்பமான காலநிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை samugammedia இலங்கையில் வெப்பமான காலநிலை காரணமாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.கடும் வெப்பம் காரணமாக, மக்கள் தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவுவதே இந்த கோரிக்கை விடுப்பதற்கு காரணமாகும்.பல மாவட்டங்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை வெப்பம் நிலவினாலும், அதை விட மனித உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டின் வெப்பமான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது மழை கிடைக்கப்பெறும் நிலையில், வெப்பம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஆரம்பத்தில் காணப்பட்ட வெப்பநிலை தற்போது சிறியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் வெப்பநிலை குறைவடையவில்லை.மழைவீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரிக்குமானால், வெப்பநிலை அடுத்த மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர் குறைவடையும் என அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement