• Feb 28 2025

புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் ஊடுருவல்கள் தற்போது அதிகரிப்பு; ரவிகரன் எம்.பி காட்டம்..!

Sharmi / Feb 28th 2025, 6:05 pm
image

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் ஊடுருவல்கள் தற்போது அதிகரித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(28) இடம்பெற்ற  வரவுசெலவுத்திட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும், பாராளுமன்ற அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 சட்டவிரோத போதைப்பொருட்களின் ஊடுருவல்களால் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், திருட்டுக்கள், சட்டவிரோத செயற்பாடுகள், சமூகசீர்கேடுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அதிகரித்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினை வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசானது கிளீன் சிறீலங்கா என்ற திட்டத்தை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தும் எண்ணத்தை, செயலை நாமும் முற்றுமுழுதாக வரவேற்கின்றோம். இந்த நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது போதைப்பொருள் பாவனை தலைவிரித்து ஆடுகின்றது. அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையாலும், போதைப்பொருள் ஊடுருவல்களாலும் நாடு முழுவதும் தள்ளாடுகின்றது.

எங்களுடைய வடக்குகிழக்கில் 2009ம் ஆண்டிற்கு முன்பு இவ்வாறான நிலமைகள் இருந்ததில்லை. அதுவும் வடக்கிலே மிகக்கட்டுப்படாக இருந்த போதைப்பொருள் பாவனைகள், தற்போது மிகவும் அதிகமாகி கிளீன் சிறிலங்கா என்ற செயற்பாட்டிற்கு எதிரான வகையில் உள்ளது.

நான் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவன், வன்னித்தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவன். வன்னியில் மிகமோசமாக, கசிப்பு, கஞ்சா, ஐஸ், ஹெரோயின் இன்னம் பல பெயர்களில் சட்டவிரோத போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றது.

முல்லைத்தீவில் படையினர் மிக அதிகமாக உள்ளதாக பல புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனையும் அளவிற்கதிகமாக அந்தப் பகுதிகளில் உலாவருகின்றது. ஏன்? இதனை பொதுமக்கள் பாதுகாப்பினையும், நாட்டைத் தூய்மையாக்கும் பணியிலும் ஈடுபடும் பாதுகாப்புத் தரப்பினால் கட்டுப்படுத்தமுட்டியாமல் உள்ளது. 

குறிப்பாக கசிப்பு என்ற சட்டவிரோத போதைப்பொருள் மிக அதிகமாக பாவனையில் உள்ளதாகவும், கசிப்பை உற்பத்தி செய்யும் சட்டவிரோத உற்பத்தியாளர்கள் பல்வேறு நவீன வழிளை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கசிப்பு உற்பத்தியாளர்களின் வீடுகளில் (சிலர்) குடிநீர்க்குழாய் திறக்கும் போது கசிப்பு உருவதாக மக்கள் எம்மிடம் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறான சம்பவம் ஒரு இடத்தில் இடம்பெற்று பிடிபட்டுள்ளது. இவ்வாறான சூட்சுமமான முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளுக்குள் சுரங்கம் தோண்டி அதற்குள்ளும் கசிப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நான் கிராமங்கள்தோறும் மக்கள்குறைகேள் சந்திப்புகளை நடாத்திவருகின்றேன். அந்தவகையில் கடந்தமாதம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளப்பள்ளம் என்ற கிராமத்தில் இடம்பெற்ற எனது மக்கள் குறைகேள்சந்திப்பில் பெருமளவு மக்கள் கூடியிருந்து என்னிடம் கைகூப்பி வேண்டினார்கள், சிலர் அழுதார்கள், தங்களுடைய குடும்பங்கள் சீரழிவதாகவும் இதனைக்கட்டுப்படுத்துங்கள், ஜனாதிபதியிடம் சொல்லுங்கள், பாராளுமண்றத்தில் சொல்லுங்கள் எனத் தெரிவித்தனர். தங்களுடைய கிராமத்தில் கசிப்பு, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களால் இதுவரை 13பேர் இறந்துவிட்டதாகவும், சிலர் இறக்கும் நிலையில் இருப்பதாவும் மக்களால் என்னிடம் முறையிடப்பட்டது.

இதேபோல பாரதிபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம், தேராவில் பகுதிகளில் இதுவரை 43பேர் மாண்டுவிட்டதாகவும், இன்னும் இறக்கும் நிலையில் சிலர் இருப்பதாகவும் தெரிவித்து, தங்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றும்படி வேண்டுகின்றார்கள். இப்படி நிலைமைகள் இன்னும் பல கிராமங்களில் உள்ளன. கசிப்பு உற்பத்தி இடம்பெறும் சில இடங்களை தாங்களே காட்டுவதாக மக்கள் சொல்கின்றார்கள்.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்திசெல்வதில் பலத்த இடர்பாடுகள் இருக்கும்போது இந்தப் போதைப்பொருள் பிரச்சனை மிகவும் மோசமாகவுள்ளது.

இதுதொடர்பில் இன்னுமொரு சம்பவத்தை இங்கு தெரிவிக்கலாமென நினைக்கின்றேன். ஒரு அம்மாவும் அவருடைய மகளும் எனது அலுவலகத்திற்கு வருகைதந்து அழுதார்கள். தந்தையின் கசிப்பு பாவனையால் வீட்டில் ஒவ்வொரு நாளும் பிரச்சனை எனவும், வீட்டிலுள்ள வயது வந்த மூன்று பிள்ளைகளும், தற்கொலை செய்யப்போவதாக சொல்கின்றார்கள் என அழுதார்கள். நிலமைகளைச் சற்று எண்ணிப்பாருங்கள். பொலிசார் என்ன பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஏன்? இவர்களால் போதைப்பொருள் உற்பத்திகளையும், ஊடுருவல்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந் நிலையில் பொலிசார் சிலபேர் இதற்கு உடைந்தையாகச் செயற்படுவதாகவும் மக்கள் முறையிடுகின்றார்கள்.

தாங்கள் பொலிசாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளும்போது, தங்களை கசிப்பு உற்பத்தியாளர்களிடம் பொலிசார் காட்டிக்கொடுப்பதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றார்கள்.

விடுதலைப்புலிகள் இருந்தகாலத்தில் கிளீன் சிறிலங்கா என நாடுமுழுவதும் இல்லாவிட்டாலும், அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள் கிளீனாக இருந்தது. போதைப்பொருள் பாவனை இல்லாத ஒருபகுதி இருந்தது. இதனை யாரும் மறுக்கமுடியாது.

மிகஅதிகமாக பொலிசாரும், படையினரும் இருக்கும் இப்போது இதனைக் கட்டுப்படுத்தாது கசிப்பு உற்பத்தி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களின் ஊடுருவல்களால் பலகுடும்பங்கள் பசிபட்டினியுடன் காணப்படும் அவலம், பலதிருட்டு சம்பவங்கள் இடம்பெறும் நிலமை, இதனைவிட ஒருதொகுதி இளைஞர் குழாம் போதைக்கு அடிமையாகி மரணிக்கும் நிலைமைகள், அதிகரிக்கும் சமூகச்சீர்கேடுகள் என துன்பியலான ஒரு நிலைமைக்குள் பொதுமக்கள்பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் வன்னிப்பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு மரக்கடத்தல்களும் இம்பெறுகின்றன.

சில இடங்களில் மணல்கொள்ளை, கிரவல் அகழ்வு இவ்வாறான சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் போதைக்கு அடிமையானவர்களே அதிகம் உள்ளதாக அறியக்கூடியதாகவுள்ளது.

அதேவேளை மற்றுமொரு சம்பவம், அண்மையில் முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் அமைந்துள்ள யோகபுரம் பாடசாலைக்குள் சிவில் உடையில் மது போதையில் நுழைந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாடசாலை மாணவிகளுடன் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கமைய அவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இத்தகைய செயலுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்தவிடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்து சம்பவ வீடியோ ஆதாரமும் வழங்கியுள்ளோம்.

ஒரு காலத்தில் எமது இடத்தில் பெண்கள் இரவுநேரத்தில் கூட தனியாக செல்லக்கூடிய சுதந்திரம் முல்லைத்தீவில் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

குப்பைகளை மட்டும் கூட்டி கிளீன் சிறீலங்கா ஆக்க முடியாது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். சட்டவிரோத மதுஉற்பத்திகள், சட்டவிரோத மரக்கடத்தல்கள், சட்டவிரோத மணல், கிரவல் கொள்ளைகள், சட்டவிரோத கால்நடைக்களவுகள், கடத்தல்கள், இப்படி ஏராளமாக இருக்கும் குற்றச்செயல்கள் களையப்படவேண்டும். அப்போதுதான் மக்கள் மனதில் இடம்பிடிக்கமுடியும். நாடும் கிளீன் சிறீலங்காஆகும்.

சட்டவிரோத போதைப் பொருள்குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிசார் மற்றும். பாதுகாப்புத்தரப்பினராக இருந்தால் பணியிலிருந்து நீக்கி புனர்வாழ்வு அளியுங்கள். அடுதேபோல் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களையும் கைதுசெய்து புனர்வாழ்வு அளியுங்கள்.

இவ்வாறு புனர்வாழ்வு அளிப்பதன் மூலமாவே ஒருசீரான, போதையற்ற தூய்மையான, சமூகக்கட்டமைப்பை ஏற்படுத்த முடியும். ஒரு நேர்த்தியானதும், இறுக்கமானதுமான அரச நிர்வாக கட்டமைப்பையும் ஏற்படுத்தமுடியும். இதன் மூலமே பொலிசார்மீது மக்கள் வைத்துள்ள தப்பான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும்.

அவ்வாறாக தங்களின் கிளீன் சிறீலங்கா திட்டத்தை சீராகச் செய்து தூய்மையான அரச கட்டமைப்பையும், தூய்மையான சமூகக் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தி, மக்கள் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். பொலிஸாரிடமோ, பாதுகாப்புத் தரப்பினரிடமோ சென்றால் தமக்கு தீர்வுகிடைக்கும் என்ற மனநிலையை மக்களிடம் கொண்டுவாருங்கள்.

இந்த நிலமைகளை சீராக்கி கொண்டுவந்து பாருங்கள். வளமான நாடு அழகான வாழ்க்கை, நாடு கிளீன் சிறீலங்கா ஆகிவிடும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு மேற்படி விடயங்களைக் கொண்டு வருகின்றேன் எனவும் தெரிவித்தார்.


புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் ஊடுருவல்கள் தற்போது அதிகரிப்பு; ரவிகரன் எம்.பி காட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் ஊடுருவல்கள் தற்போது அதிகரித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று(28) இடம்பெற்ற  வரவுசெலவுத்திட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும், பாராளுமன்ற அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத போதைப்பொருட்களின் ஊடுருவல்களால் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், திருட்டுக்கள், சட்டவிரோத செயற்பாடுகள், சமூகசீர்கேடுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே அதிகரித்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினை வலியுறுத்தியுள்ளார்.புதிய அரசானது கிளீன் சிறீலங்கா என்ற திட்டத்தை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தும் எண்ணத்தை, செயலை நாமும் முற்றுமுழுதாக வரவேற்கின்றோம். இந்த நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது போதைப்பொருள் பாவனை தலைவிரித்து ஆடுகின்றது. அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையாலும், போதைப்பொருள் ஊடுருவல்களாலும் நாடு முழுவதும் தள்ளாடுகின்றது.எங்களுடைய வடக்குகிழக்கில் 2009ம் ஆண்டிற்கு முன்பு இவ்வாறான நிலமைகள் இருந்ததில்லை. அதுவும் வடக்கிலே மிகக்கட்டுப்படாக இருந்த போதைப்பொருள் பாவனைகள், தற்போது மிகவும் அதிகமாகி கிளீன் சிறிலங்கா என்ற செயற்பாட்டிற்கு எதிரான வகையில் உள்ளது.நான் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவன், வன்னித்தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவன். வன்னியில் மிகமோசமாக, கசிப்பு, கஞ்சா, ஐஸ், ஹெரோயின் இன்னம் பல பெயர்களில் சட்டவிரோத போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றது.முல்லைத்தீவில் படையினர் மிக அதிகமாக உள்ளதாக பல புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனையும் அளவிற்கதிகமாக அந்தப் பகுதிகளில் உலாவருகின்றது. ஏன் இதனை பொதுமக்கள் பாதுகாப்பினையும், நாட்டைத் தூய்மையாக்கும் பணியிலும் ஈடுபடும் பாதுகாப்புத் தரப்பினால் கட்டுப்படுத்தமுட்டியாமல் உள்ளது. குறிப்பாக கசிப்பு என்ற சட்டவிரோத போதைப்பொருள் மிக அதிகமாக பாவனையில் உள்ளதாகவும், கசிப்பை உற்பத்தி செய்யும் சட்டவிரோத உற்பத்தியாளர்கள் பல்வேறு நவீன வழிளை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.கசிப்பு உற்பத்தியாளர்களின் வீடுகளில் (சிலர்) குடிநீர்க்குழாய் திறக்கும் போது கசிப்பு உருவதாக மக்கள் எம்மிடம் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறான சம்பவம் ஒரு இடத்தில் இடம்பெற்று பிடிபட்டுள்ளது. இவ்வாறான சூட்சுமமான முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளுக்குள் சுரங்கம் தோண்டி அதற்குள்ளும் கசிப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.நான் கிராமங்கள்தோறும் மக்கள்குறைகேள் சந்திப்புகளை நடாத்திவருகின்றேன். அந்தவகையில் கடந்தமாதம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளப்பள்ளம் என்ற கிராமத்தில் இடம்பெற்ற எனது மக்கள் குறைகேள்சந்திப்பில் பெருமளவு மக்கள் கூடியிருந்து என்னிடம் கைகூப்பி வேண்டினார்கள், சிலர் அழுதார்கள், தங்களுடைய குடும்பங்கள் சீரழிவதாகவும் இதனைக்கட்டுப்படுத்துங்கள், ஜனாதிபதியிடம் சொல்லுங்கள், பாராளுமண்றத்தில் சொல்லுங்கள் எனத் தெரிவித்தனர். தங்களுடைய கிராமத்தில் கசிப்பு, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களால் இதுவரை 13பேர் இறந்துவிட்டதாகவும், சிலர் இறக்கும் நிலையில் இருப்பதாவும் மக்களால் என்னிடம் முறையிடப்பட்டது.இதேபோல பாரதிபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம், தேராவில் பகுதிகளில் இதுவரை 43பேர் மாண்டுவிட்டதாகவும், இன்னும் இறக்கும் நிலையில் சிலர் இருப்பதாகவும் தெரிவித்து, தங்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றும்படி வேண்டுகின்றார்கள். இப்படி நிலைமைகள் இன்னும் பல கிராமங்களில் உள்ளன. கசிப்பு உற்பத்தி இடம்பெறும் சில இடங்களை தாங்களே காட்டுவதாக மக்கள் சொல்கின்றார்கள்.தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்திசெல்வதில் பலத்த இடர்பாடுகள் இருக்கும்போது இந்தப் போதைப்பொருள் பிரச்சனை மிகவும் மோசமாகவுள்ளது.இதுதொடர்பில் இன்னுமொரு சம்பவத்தை இங்கு தெரிவிக்கலாமென நினைக்கின்றேன். ஒரு அம்மாவும் அவருடைய மகளும் எனது அலுவலகத்திற்கு வருகைதந்து அழுதார்கள். தந்தையின் கசிப்பு பாவனையால் வீட்டில் ஒவ்வொரு நாளும் பிரச்சனை எனவும், வீட்டிலுள்ள வயது வந்த மூன்று பிள்ளைகளும், தற்கொலை செய்யப்போவதாக சொல்கின்றார்கள் என அழுதார்கள். நிலமைகளைச் சற்று எண்ணிப்பாருங்கள். பொலிசார் என்ன பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஏன் இவர்களால் போதைப்பொருள் உற்பத்திகளையும், ஊடுருவல்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை.இந் நிலையில் பொலிசார் சிலபேர் இதற்கு உடைந்தையாகச் செயற்படுவதாகவும் மக்கள் முறையிடுகின்றார்கள்.தாங்கள் பொலிசாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளும்போது, தங்களை கசிப்பு உற்பத்தியாளர்களிடம் பொலிசார் காட்டிக்கொடுப்பதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றார்கள்.விடுதலைப்புலிகள் இருந்தகாலத்தில் கிளீன் சிறிலங்கா என நாடுமுழுவதும் இல்லாவிட்டாலும், அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள் கிளீனாக இருந்தது. போதைப்பொருள் பாவனை இல்லாத ஒருபகுதி இருந்தது. இதனை யாரும் மறுக்கமுடியாது.மிகஅதிகமாக பொலிசாரும், படையினரும் இருக்கும் இப்போது இதனைக் கட்டுப்படுத்தாது கசிப்பு உற்பத்தி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.போதைப்பொருட்களின் ஊடுருவல்களால் பலகுடும்பங்கள் பசிபட்டினியுடன் காணப்படும் அவலம், பலதிருட்டு சம்பவங்கள் இடம்பெறும் நிலமை, இதனைவிட ஒருதொகுதி இளைஞர் குழாம் போதைக்கு அடிமையாகி மரணிக்கும் நிலைமைகள், அதிகரிக்கும் சமூகச்சீர்கேடுகள் என துன்பியலான ஒரு நிலைமைக்குள் பொதுமக்கள்பலர் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் வன்னிப்பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு மரக்கடத்தல்களும் இடம்பெறுகின்றன. சில இடங்களில் மணல்கொள்ளை, கிரவல் அகழ்வு இவ்வாறான சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் போதைக்கு அடிமையானவர்களே அதிகம் உள்ளதாக அறியக்கூடியதாகவுள்ளது.அதேவேளை மற்றுமொரு சம்பவம், அண்மையில் முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் அமைந்துள்ள யோகபுரம் பாடசாலைக்குள் சிவில் உடையில் மது போதையில் நுழைந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாடசாலை மாணவிகளுடன் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளார். இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கமைய அவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இத்தகைய செயலுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.இந்தவிடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்து சம்பவ வீடியோ ஆதாரமும் வழங்கியுள்ளோம்.ஒரு காலத்தில் எமது இடத்தில் பெண்கள் இரவுநேரத்தில் கூட தனியாக செல்லக்கூடிய சுதந்திரம் முல்லைத்தீவில் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.குப்பைகளை மட்டும் கூட்டி கிளீன் சிறீலங்கா ஆக்க முடியாது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். சட்டவிரோத மதுஉற்பத்திகள், சட்டவிரோத மரக்கடத்தல்கள், சட்டவிரோத மணல், கிரவல் கொள்ளைகள், சட்டவிரோத கால்நடைக்களவுகள், கடத்தல்கள், இப்படி ஏராளமாக இருக்கும் குற்றச்செயல்கள் களையப்படவேண்டும். அப்போதுதான் மக்கள் மனதில் இடம்பிடிக்கமுடியும். நாடும் கிளீன் சிறீலங்காஆகும்.சட்டவிரோத போதைப் பொருள்குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிசார் மற்றும். பாதுகாப்புத்தரப்பினராக இருந்தால் பணியிலிருந்து நீக்கி புனர்வாழ்வு அளியுங்கள். அடுதேபோல் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களையும் கைதுசெய்து புனர்வாழ்வு அளியுங்கள். இவ்வாறு புனர்வாழ்வு அளிப்பதன் மூலமாவே ஒருசீரான, போதையற்ற தூய்மையான, சமூகக்கட்டமைப்பை ஏற்படுத்த முடியும். ஒரு நேர்த்தியானதும், இறுக்கமானதுமான அரச நிர்வாக கட்டமைப்பையும் ஏற்படுத்தமுடியும். இதன் மூலமே பொலிசார்மீது மக்கள் வைத்துள்ள தப்பான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும்.அவ்வாறாக தங்களின் கிளீன் சிறீலங்கா திட்டத்தை சீராகச் செய்து தூய்மையான அரச கட்டமைப்பையும், தூய்மையான சமூகக் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தி, மக்கள் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். பொலிஸாரிடமோ, பாதுகாப்புத் தரப்பினரிடமோ சென்றால் தமக்கு தீர்வுகிடைக்கும் என்ற மனநிலையை மக்களிடம் கொண்டுவாருங்கள்.இந்த நிலமைகளை சீராக்கி கொண்டுவந்து பாருங்கள். வளமான நாடு அழகான வாழ்க்கை, நாடு கிளீன் சிறீலங்கா ஆகிவிடும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு மேற்படி விடயங்களைக் கொண்டு வருகின்றேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement