• Dec 03 2024

தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதலால் : மக்கள் மத்தியில் பலவீனப்பட்டுள்ளோம் - இளங்கோவன்

Tharmini / Nov 11th 2024, 2:58 pm
image

தமிழரசு  கட்சியின் உட்கட்சி மோதல் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் நாம் பலவீனப்பட்டுள்ளோம்.

இது கவலைக்ககுரிய விடயம் என அக் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளார்  இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று(11) இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த தேர்தலில் நான் தெரிவு செய்யப்பட்டாலும், தெரிவு செய்யப்படாது விட்டாலும் எதிர்காலத்தில் தமிழரசு  கட்சியினை ஒற்றுமையாக ஒரு  தலைமையின் கீழ் கொண்டு செல்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன். 

எங்களை பொறுத்தவரை நாங்கள் தமிழ் மக்களின் மக்களின் உரிமைக்கும் பொருளாதார அபிவிருத்திக்குமாக செயற்படுவோம். எனத் தெரிவித்தவரிடம் தமிழரசு கட்சி வேட்பாளர் ஒருவர்,  ஏனைய கட்சிகளின்  வேட்பாளர்களை விமர்சிப்பதனை விட தன்னுடைய கட்சி வேட்பாளர்கள்  மீது கடும் விமர்சனத்தையும், குற்றச் சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றார். 

இன்று(11) கிளிநொச்சியில் உங்களுடைய கட்சி எதிரும் புதிருமாக இரண்டு கூட்டங்கள் நடத்துகிறது. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள் என வினவிய போது, இது ஒரு மிக மோசமான நிலைமை தமிழரசு கட்சி உட்கட்சி மோதல்களால் பலவீனப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்களும் நம்பிக்கையற்றுள்ளனர். இந்த நிலைமை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எதிர் காலத்தில் நான் எமது கட்சியை ஒற்றுமைப்படுத்தி ஒரு அணியாக கொண்டு செல்வதற்கு முயற்சிப்பேன். எனத் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதலால் : மக்கள் மத்தியில் பலவீனப்பட்டுள்ளோம் - இளங்கோவன் தமிழரசு  கட்சியின் உட்கட்சி மோதல் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் நாம் பலவீனப்பட்டுள்ளோம். இது கவலைக்ககுரிய விடயம் என அக் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளார்  இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று(11) இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்இந்த தேர்தலில் நான் தெரிவு செய்யப்பட்டாலும், தெரிவு செய்யப்படாது விட்டாலும் எதிர்காலத்தில் தமிழரசு  கட்சியினை ஒற்றுமையாக ஒரு  தலைமையின் கீழ் கொண்டு செல்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன்.  எங்களை பொறுத்தவரை நாங்கள் தமிழ் மக்களின் மக்களின் உரிமைக்கும் பொருளாதார அபிவிருத்திக்குமாக செயற்படுவோம். எனத் தெரிவித்தவரிடம் தமிழரசு கட்சி வேட்பாளர் ஒருவர்,  ஏனைய கட்சிகளின்  வேட்பாளர்களை விமர்சிப்பதனை விட தன்னுடைய கட்சி வேட்பாளர்கள்  மீது கடும் விமர்சனத்தையும், குற்றச் சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றார். இன்று(11) கிளிநொச்சியில் உங்களுடைய கட்சி எதிரும் புதிருமாக இரண்டு கூட்டங்கள் நடத்துகிறது. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள் என வினவிய போது, இது ஒரு மிக மோசமான நிலைமை தமிழரசு கட்சி உட்கட்சி மோதல்களால் பலவீனப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களும் நம்பிக்கையற்றுள்ளனர். இந்த நிலைமை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எதிர் காலத்தில் நான் எமது கட்சியை ஒற்றுமைப்படுத்தி ஒரு அணியாக கொண்டு செல்வதற்கு முயற்சிப்பேன். எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement