• Apr 21 2025

நாட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி..!

Chithra / Apr 20th 2025, 9:15 am
image


உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர். இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாட்கள் தவக் காலத்தில் கிறிஸ்தவர்கள் மதக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.  

அதற்கமைய, கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில், பிரதான உயிர்த்த ஞாயிறு ஆராதனை நேற்று இரவு நடைபெற்றது. 

அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களில் நேற்று இரவு விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இன்றும் வழிபாடுகள் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில்,  இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியர் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஐயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொண்டனர்.

திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றதுடன் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


நாட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி. உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர். இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாட்கள் தவக் காலத்தில் கிறிஸ்தவர்கள் மதக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.  அதற்கமைய, கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில், பிரதான உயிர்த்த ஞாயிறு ஆராதனை நேற்று இரவு நடைபெற்றது. அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களில் நேற்று இரவு விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இன்றும் வழிபாடுகள் நடைபெறவுள்ளது.இந்தநிலையில்,  இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியர் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.மன்னார் மறைமாவட்ட ஐயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொண்டனர்.திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றதுடன் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement