• Nov 23 2024

சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம்

Chithra / Oct 22nd 2024, 1:25 pm
image

 

கொழும்பு - தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை விசேட திட்டமாக பிரகடனப்படுத்துவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும் அதிகாரசபையின் முழு உரிமையின் கீழ் கொள்கலன் முனையமாக செயற்படுவதற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை 02-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, தற்போது சம்பந்தப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் விடப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், குறித்த கொள்கலன் முனையத்திற்கான கிரேன்கள் கொள்வனவு செய்வதற்கான கொள்முதலும் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் தனியார் முனைய செயற்பாட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் பல்வேறு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.


சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம்  கொழும்பு - தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை விசேட திட்டமாக பிரகடனப்படுத்துவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும் அதிகாரசபையின் முழு உரிமையின் கீழ் கொள்கலன் முனையமாக செயற்படுவதற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை 02-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, தற்போது சம்பந்தப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் விடப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், குறித்த கொள்கலன் முனையத்திற்கான கிரேன்கள் கொள்வனவு செய்வதற்கான கொள்முதலும் வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு துறைமுகத்தின் தனியார் முனைய செயற்பாட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் பல்வேறு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement