• Apr 05 2025

கிழக்கு ஆளுநர்- உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் சந்திப்பு..!

Sharmi / Oct 25th 2024, 4:01 pm
image

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்.ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன், திருகோணமலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கவும், கழிவுகளை பிரித்து சேகரித்து கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்து அறிக்கை அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் செயளாலர்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். .

ஒவ்வொரு உள்ளுராட்சி சபையும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 


கிழக்கு ஆளுநர்- உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் சந்திப்பு. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்.ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன், திருகோணமலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கவும், கழிவுகளை பிரித்து சேகரித்து கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்து அறிக்கை அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் செயளாலர்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். .ஒவ்வொரு உள்ளுராட்சி சபையும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now