• May 20 2024

ஆந்திரா மாநில முதல்வருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு! முக்கிய கோரிக்கையை முன்வைத்த செந்தில் samugammedia

Chithra / Jul 4th 2023, 4:03 pm
image

Advertisement


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச (Andhra Pradesh) முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வமாக விஜயத்தை மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், பல முக்கிய தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துள்ளார.

இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும்,  கரும்பு, மிளகாய் விவசாயம், மருந்துத் தொழில்களை நிறுவுதல் தொடர்பான கூட்டுத் திட்டத்திற்காக இருதரப்பு சார்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள கைத்தொழில் பூங்காவில் கைத்தொழில்களை நிறுவுவதற்கு முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என ஆந்திரப் பிரதேச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மட்டக்களப்பிலுசூஉள்ள BOI Textile park பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

திருமலை, திருப்பதி ஆலயங்களில் வழிபடுவதற்கு இலங்கையில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களில் பலர் முதியவர்கள். அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர், எனவே இலங்கையில் திருப்பதி, திருமலை ஆலயங்களை நிறுவுமாறு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான், கடந்த 29.06.2023 அன்று  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


ஆந்திரா மாநில முதல்வருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு முக்கிய கோரிக்கையை முன்வைத்த செந்தில் samugammedia கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச (Andhra Pradesh) முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வமாக விஜயத்தை மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன், பல முக்கிய தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.இந்த நிலையில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துள்ளார.இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.மேலும்,  கரும்பு, மிளகாய் விவசாயம், மருந்துத் தொழில்களை நிறுவுதல் தொடர்பான கூட்டுத் திட்டத்திற்காக இருதரப்பு சார்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள கைத்தொழில் பூங்காவில் கைத்தொழில்களை நிறுவுவதற்கு முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என ஆந்திரப் பிரதேச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், மட்டக்களப்பிலுசூஉள்ள BOI Textile park பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.திருமலை, திருப்பதி ஆலயங்களில் வழிபடுவதற்கு இலங்கையில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களில் பலர் முதியவர்கள். அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர், எனவே இலங்கையில் திருப்பதி, திருமலை ஆலயங்களை நிறுவுமாறு ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான், கடந்த 29.06.2023 அன்று  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement