• Dec 23 2024

பண்டிகை காலங்களில் வெளியிடங்களில் உணவு உண்பதால் பல நோய்கள் ஏற்படலாம்! - வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Chithra / Dec 23rd 2024, 9:11 am
image


பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்காக செல்லும் சிறுவர்கள் சுகாதார மற்ற  உணவகங்களில் உணவு மற்றும் சிற்றுண்டிகளை கொள்வனவு செய்து உண்பதால் வயிற்றுப்போக்கு, மற்றும் காய்ச்சல் ஏற்பட கூடுமென கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய நோய் நிலைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாடசாலை விடுமுறை, பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறுவர்கள் வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்காக செல்வதும் அதிகரித்துள்ளது. 

அவ்வாறு சுற்றுலாக்களுக்கு செல்வோர் கண்களில் தென்படும் உணவகங்களிலும் கடைகளிலும் உணவு மற்றும் சிற்றுண்டிகளை கொள்வனவு செய்து உண்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு வெளியிடங்களில் உணவு பொருட்கள் மற்றும் பானங்களை கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும். 

அசுத்தமான உணவுப் பொருட்களை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு, டைபைடு காய்ச்சல் (Typhoid fever) போன்ற நோய் நிலைமைகளுக்கு ஆளாக நேரிடலாம். 

உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்களை தயாரித்து விற்பனை செய்பவர்களும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு சுகாதாரமான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். 

சிறுவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏதும் ஏற்படும் பட்சத்தில் எலுமிச்சை பழ பானம், அரிசி கஞ்சி, இளநீர், யோகட், வாழைப்பழம் ஆகியவற்றை வழங்குங்கள். எண்ணை சார்ந்த உணவுப் பொருட்களை தவிர்க்கலாம்.

இதன்போது உடலில் ஏற்படக்கூடிய நீரிழப்பை கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு காணப்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுவது நல்லது. 

அத்தோடு இந்நாட்களில் வாகன விபத்துக்களும் அதிகரித்துள்ளன. ஆகையால் வெளியிடங்களுக்கு பயணிக்கும் போது அவதானத்துடன் செயற்படுங்கள். 

ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராட, விளையாட விரும்புபவர்கள் பாதுகாப்பான இடங்களில் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடலாம்.

இதன்போது பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். 

பண்டிகை கால கொண்டாட்டங்கள் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபடும்  சிறுவர்கள் பாதுகாப்பான முறையில் மத்தாப்பு, பட்டாசுகளை வெடித்து மகிழலாம். 

எவ்வாறெனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தீ காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் செற்படுவது நல்லது என்றார்.

பண்டிகை காலங்களில் வெளியிடங்களில் உணவு உண்பதால் பல நோய்கள் ஏற்படலாம் - வைத்திய நிபுணர் எச்சரிக்கை பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்காக செல்லும் சிறுவர்கள் சுகாதார மற்ற  உணவகங்களில் உணவு மற்றும் சிற்றுண்டிகளை கொள்வனவு செய்து உண்பதால் வயிற்றுப்போக்கு, மற்றும் காய்ச்சல் ஏற்பட கூடுமென கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய நோய் நிலைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,பாடசாலை விடுமுறை, பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறுவர்கள் வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்காக செல்வதும் அதிகரித்துள்ளது. அவ்வாறு சுற்றுலாக்களுக்கு செல்வோர் கண்களில் தென்படும் உணவகங்களிலும் கடைகளிலும் உணவு மற்றும் சிற்றுண்டிகளை கொள்வனவு செய்து உண்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.இவ்வாறு வெளியிடங்களில் உணவு பொருட்கள் மற்றும் பானங்களை கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும். அசுத்தமான உணவுப் பொருட்களை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு, டைபைடு காய்ச்சல் (Typhoid fever) போன்ற நோய் நிலைமைகளுக்கு ஆளாக நேரிடலாம். உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்களை தயாரித்து விற்பனை செய்பவர்களும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு சுகாதாரமான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். சிறுவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏதும் ஏற்படும் பட்சத்தில் எலுமிச்சை பழ பானம், அரிசி கஞ்சி, இளநீர், யோகட், வாழைப்பழம் ஆகியவற்றை வழங்குங்கள். எண்ணை சார்ந்த உணவுப் பொருட்களை தவிர்க்கலாம்.இதன்போது உடலில் ஏற்படக்கூடிய நீரிழப்பை கட்டுப்படுத்துவது அவசியமாகும்.தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு காணப்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுவது நல்லது. அத்தோடு இந்நாட்களில் வாகன விபத்துக்களும் அதிகரித்துள்ளன. ஆகையால் வெளியிடங்களுக்கு பயணிக்கும் போது அவதானத்துடன் செயற்படுங்கள். ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராட, விளையாட விரும்புபவர்கள் பாதுகாப்பான இடங்களில் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடலாம்.இதன்போது பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். பண்டிகை கால கொண்டாட்டங்கள் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபடும்  சிறுவர்கள் பாதுகாப்பான முறையில் மத்தாப்பு, பட்டாசுகளை வெடித்து மகிழலாம். எவ்வாறெனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தீ காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் செற்படுவது நல்லது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement