• May 20 2024

வரவுசெலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகளுக்கு முன்னுரிமை! samugammedia

Chithra / Oct 16th 2023, 3:00 pm
image

Advertisement

 

2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து நிற்க அரசாங்கம் முயற்சிக்கும் இவ்வேளையில் வரவு செலவுத் திட்டம் குறித்த உண்மையை மறைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


இதேவேளை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது மாவட்டங்களில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இரண்டு வருடங்களாக ஒதுக்கப்படாத நிதியை ஒதுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவது குறித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரவுசெலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகளுக்கு முன்னுரிமை samugammedia  2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து நிற்க அரசாங்கம் முயற்சிக்கும் இவ்வேளையில் வரவு செலவுத் திட்டம் குறித்த உண்மையை மறைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதேவேளை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது மாவட்டங்களில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இரண்டு வருடங்களாக ஒதுக்கப்படாத நிதியை ஒதுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவது குறித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement