• May 17 2024

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு..!

Chithra / Nov 27th 2023, 1:43 pm
image

Advertisement


எதிர்வரும் நான்காம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

இன்று நாடாளுமன்ற கேள்வி பதில் நேர உரையில் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நான்காம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகி 27ம் திகதியுடன் நிறைவு பெறுகிறது.

ஏழு இலட்சத்து நாற்பது ஆயிரம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படவுள்ளன.

பின்தங்கிய, கடுமையாக பின்தங்கிய, தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் இருந்து இந்நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு  “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து அடுத்த வருடம் முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் 03 இலட்சம் பாடசாலை மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் படிப்படியாக அதிகரித்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு. எதிர்வரும் நான்காம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.இன்று நாடாளுமன்ற கேள்வி பதில் நேர உரையில் கருத்துத் தெரிவிக்கையில்,எதிர்வரும் நான்காம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகி 27ம் திகதியுடன் நிறைவு பெறுகிறது.ஏழு இலட்சத்து நாற்பது ஆயிரம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படவுள்ளன.பின்தங்கிய, கடுமையாக பின்தங்கிய, தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் இருந்து இந்நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.இதேவேளை அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு  “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து அடுத்த வருடம் முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.அதனடிப்படையில் 03 இலட்சம் பாடசாலை மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் படிப்படியாக அதிகரித்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement