• Nov 17 2024

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் மறைவு..!

Sharmi / Nov 7th 2024, 1:32 pm
image

ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொன்னம்பலம்(மு. பொ) இன்று அதிகாலை(07) கொழும்பில் காலமானார். 

யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.  

1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும். 

அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.

இந்நிலையில் அவருக்கு அண்மையில் 'தமிழ் நிதி' விருதினை வழங்கிக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவம் செய்தது. 

'மு.பொ வின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று' என காரைக்கவி கந்தையா பத்மானந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் மறைவு. ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொன்னம்பலம்(மு. பொ) இன்று அதிகாலை(07) கொழும்பில் காலமானார். யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.  1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும். அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.இந்நிலையில் அவருக்கு அண்மையில் 'தமிழ் நிதி' விருதினை வழங்கிக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவம் செய்தது. 'மு.பொ வின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று' என காரைக்கவி கந்தையா பத்மானந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement