கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த முட்டையின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பண்டிகை காலத்தினை முன்னிட்டு முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் 38 ரூபாவாக காணப்பட்ட முட்டையின் விலை தற்போது 55 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்துடன், உள்நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களில், கேக் உள்ளிட்ட உணவு பொருட்களின் உற்பத்திக்காக அதிகளவில் முட்டைகள் பயன்படுத்தப்பட்டமையினாலேயே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு. கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த முட்டையின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.பண்டிகை காலத்தினை முன்னிட்டு முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் 38 ரூபாவாக காணப்பட்ட முட்டையின் விலை தற்போது 55 ரூபாவாக காணப்படுகின்றது.அத்துடன், உள்நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பண்டிகை காலங்களில், கேக் உள்ளிட்ட உணவு பொருட்களின் உற்பத்திக்காக அதிகளவில் முட்டைகள் பயன்படுத்தப்பட்டமையினாலேயே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.