• Jan 07 2025

கொழும்பில் கட்டடமொன்றின் வளாகத்திலிருந்து முதியவர் சடலமாக மீட்பு!

Chithra / Dec 16th 2024, 3:48 pm
image

  

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கட்டடம்  ஒன்றின் வளாகத்திலிருந்து நேற்று  (15) காலை முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

65 முதல் 70 வயது மதிக்கத்தக்க 05 அடி 08 அங்குலம் உயரமுடைய முதியவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கொழும்பில் கட்டடமொன்றின் வளாகத்திலிருந்து முதியவர் சடலமாக மீட்பு   கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கட்டடம்  ஒன்றின் வளாகத்திலிருந்து நேற்று  (15) காலை முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 65 முதல் 70 வயது மதிக்கத்தக்க 05 அடி 08 அங்குலம் உயரமுடைய முதியவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement