• Nov 17 2024

இருதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் வயோதிபப் பெண் உயரிழப்பு- நெடுந்தீவில் சோகம்!

Tamil nila / Aug 24th 2024, 7:44 pm
image

இருதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் வயோதிபப் பெண் இன்று அதிகாலை வேளை பரிதாபமாக உயரிழந்துள்ளார். 

நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து லட்சுமி (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்மணி நேற்று மாலை வீட்டுக்கு வெளியே வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். இதன்போது அங்கிருந்த வளர்ப்பு பன்றி ஒன்று அவரை கொடூரமாக தாக்கியது. இருதயம் வெளியே தெரியும் அளவிற்கு கடித்துக் குதறியது.

இதனால் படுகாயமடைந்த குறித்த வயோதிபப் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் வயோதிபப் பெண் உயரிழப்பு- நெடுந்தீவில் சோகம் இருதயம் தெரியும் அளவிற்கு பன்றி கடித்ததால் வயோதிபப் பெண் இன்று அதிகாலை வேளை பரிதாபமாக உயரிழந்துள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து லட்சுமி (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண்மணி நேற்று மாலை வீட்டுக்கு வெளியே வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். இதன்போது அங்கிருந்த வளர்ப்பு பன்றி ஒன்று அவரை கொடூரமாக தாக்கியது. இருதயம் வெளியே தெரியும் அளவிற்கு கடித்துக் குதறியது.இதனால் படுகாயமடைந்த குறித்த வயோதிபப் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement