• Nov 23 2024

நாளுக்குநாள் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் - பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

Chithra / Nov 10th 2024, 12:54 pm
image

 

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று மேலும் 160 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2348 ஆகும்.

அவற்றில் 1861 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமெனவும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள நாளை நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​தேர்தல் பிரசாரத்துக்காக, வேட்பாளர்கள் அலுவலகங்களை அமைத்துள்ளனர். 

அந்த அலுவலகங்களில் இருந்து, தொகுதி அளவில் இயங்கும் அனைத்து அலுவலகங்களையும், வரும் 12ம் திகதி நள்ளிரவு முதல் அகற்ற வேண்டும்.

அந்த திகதியிலிருந்து வேட்பாளர்கள் தொகுதிக்கு ஒரு அலுவலகத்தை அமைக்கலாம்.  மேலும், வேட்பாளரின் வீட்டை அலுவலகமாக பராமரிக்கலாம். 

ஆனால் அந்த அலுவலகங்கள் எதுவும் அலங்கரிக்கவோ அல்லது வேறு எந்த விளம்பர வேலைகளையும் செய்யவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்குநாள் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் - பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு  எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.நேற்று மேலும் 160 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2348 ஆகும்.அவற்றில் 1861 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.இதேவேளை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமெனவும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள நாளை நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தற்போது, ​​தேர்தல் பிரசாரத்துக்காக, வேட்பாளர்கள் அலுவலகங்களை அமைத்துள்ளனர். அந்த அலுவலகங்களில் இருந்து, தொகுதி அளவில் இயங்கும் அனைத்து அலுவலகங்களையும், வரும் 12ம் திகதி நள்ளிரவு முதல் அகற்ற வேண்டும்.அந்த திகதியிலிருந்து வேட்பாளர்கள் தொகுதிக்கு ஒரு அலுவலகத்தை அமைக்கலாம்.  மேலும், வேட்பாளரின் வீட்டை அலுவலகமாக பராமரிக்கலாம். ஆனால் அந்த அலுவலகங்கள் எதுவும் அலங்கரிக்கவோ அல்லது வேறு எந்த விளம்பர வேலைகளையும் செய்யவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement