• Nov 19 2024

சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயல்பாட்டில் இருந்து நீக்கிய தேர்தல் பெறுபேறுகள்! பெப்ரல் சுட்டிக்காட்டு

Chithra / Nov 19th 2024, 9:20 am
image

 

தேர்தல் பெறுபேறுகள் சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயல்பாட்டில் இருந்து நீக்கிவிடும் வகையில் அமைந்துள்ளன என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

தேர்தல் தினத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எந்த முறைப்பாடும் இல்லை 

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் பிரசார காலப்பகுதியில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தபோதும் தேர்தல் தினத்திலும் அதற்கு பின்னரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை. 

அதேபோன்று தேர்தல் சட்ட திட்டங்களை தேர்தல் ஆணைக்குழு, பொலிஸார் மிகவும் உறுதியாக கடைப்பிடித்து வந்தனர். 

இடம்பெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல், தேர்தல் கலாசாரத்தை முற்றாக அரசியல் வரைபடத்தில் இருந்து அகற்றிவிடவும், சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயற்பாட்டில் இருந்து நீக்குவதற்கும் இந்த தேர்தல் பெறுபேறு அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த தேர்தல் மிகவும் தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றாலும் அரச அதிகாரங்கள் மற்றும் அரச சொத்துக்கள் பாவனை மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது. 

ஆனால் இந்த தேர்தலில் அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களின் பாவனை பயன்படுத்தப்படாத மட்டத்திலேயே இருந்து வந்தது. 

அதனால் நீதி மற்றும் சுதந்திரமான தேர்தல் ஒன்றுக்கு தேவையான அடிப்படை அளவுகோளில் நூற்றுக்கு 80 வீதத்துக்கும் அதிகம் பூரணப்படுத்துவதற்கு முடியுமான  தேர்தலாகவே இந்த தேர்தலை நாங்கள் காண்கிறோம்.

இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தேவைப்படாது என நாங்கள் நினைக்கிறோம். - என்றார்.

சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயல்பாட்டில் இருந்து நீக்கிய தேர்தல் பெறுபேறுகள் பெப்ரல் சுட்டிக்காட்டு  தேர்தல் பெறுபேறுகள் சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயல்பாட்டில் இருந்து நீக்கிவிடும் வகையில் அமைந்துள்ளன என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.தேர்தல் தினத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எந்த முறைப்பாடும் இல்லை பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தேர்தல் பிரசார காலப்பகுதியில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தபோதும் தேர்தல் தினத்திலும் அதற்கு பின்னரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை. அதேபோன்று தேர்தல் சட்ட திட்டங்களை தேர்தல் ஆணைக்குழு, பொலிஸார் மிகவும் உறுதியாக கடைப்பிடித்து வந்தனர். இடம்பெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல், தேர்தல் கலாசாரத்தை முற்றாக அரசியல் வரைபடத்தில் இருந்து அகற்றிவிடவும், சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயற்பாட்டில் இருந்து நீக்குவதற்கும் இந்த தேர்தல் பெறுபேறு அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த தேர்தல் மிகவும் தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றாலும் அரச அதிகாரங்கள் மற்றும் அரச சொத்துக்கள் பாவனை மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களின் பாவனை பயன்படுத்தப்படாத மட்டத்திலேயே இருந்து வந்தது. அதனால் நீதி மற்றும் சுதந்திரமான தேர்தல் ஒன்றுக்கு தேவையான அடிப்படை அளவுகோளில் நூற்றுக்கு 80 வீதத்துக்கும் அதிகம் பூரணப்படுத்துவதற்கு முடியுமான  தேர்தலாகவே இந்த தேர்தலை நாங்கள் காண்கிறோம்.இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தேவைப்படாது என நாங்கள் நினைக்கிறோம். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement