• Apr 27 2024

தேர்தலை நடத்தமுடியாது: அரசாங்கத்தின் சூழ்ச்சியால் கைவிரித்தது தேர்தல்கள் ஆணைக்குழு-மனோ காட்டம்!

Sharmi / Feb 14th 2023, 2:19 pm
image

Advertisement

அரங்கத்தை மீறி, உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிற்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் மனோ கணேசன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

கட்சி பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்த செய்தியை புரிந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்த அரசாங்கம் விடாது என்றும் ஆகவே தேர்தல் நடத்த வேண்டுமானால், நீங்கள் தெருப்போராட்டம் செய்வதை தவிர வேறுவழியில்லை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தேர்தலை நடத்தக்கூடாது என்று பிடிவாதம் பிடிப்பதாகவும் இதுவே ஜனநாயகத்தின் பரிதாபகரமான நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பலவீனமடைந்துள்ளதாகவும் செய்வதறியாது குழம்பியுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பாக நடைபெறுகின்ற எந்தவொரு வழக்கிலும் சட்டமா அதிபர் முன்னையாக மாட்டார் என அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தலைவர் பகிரங்கமாக தெரிவித்திருந்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியோ அல்லது ஜக்கிய தேசிய கட்சயோ தமது நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டுமென கலந்துரையாடலின் போது தாம் கோரியதாகவும் ஆனால் அந்த இரு கட்சியினரும் தேர்தல் தொடர்பான நிபை;பாட்டினை இறுதிவரை தெரிவிக்கவில்லை என்றும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை நடத்தமுடியாது: அரசாங்கத்தின் சூழ்ச்சியால் கைவிரித்தது தேர்தல்கள் ஆணைக்குழு-மனோ காட்டம் அரங்கத்தை மீறி, உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிற்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் மனோ கணேசன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.கட்சி பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்த செய்தியை புரிந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் நடத்த அரசாங்கம் விடாது என்றும் ஆகவே தேர்தல் நடத்த வேண்டுமானால், நீங்கள் தெருப்போராட்டம் செய்வதை தவிர வேறுவழியில்லை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் தேர்தலை நடத்தக்கூடாது என்று பிடிவாதம் பிடிப்பதாகவும் இதுவே ஜனநாயகத்தின் பரிதாபகரமான நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பலவீனமடைந்துள்ளதாகவும் செய்வதறியாது குழம்பியுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பாக நடைபெறுகின்ற எந்தவொரு வழக்கிலும் சட்டமா அதிபர் முன்னையாக மாட்டார் என அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தலைவர் பகிரங்கமாக தெரிவித்திருந்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.பொதுஜன பெரமுன கட்சியோ அல்லது ஜக்கிய தேசிய கட்சயோ தமது நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டுமென கலந்துரையாடலின் போது தாம் கோரியதாகவும் ஆனால் அந்த இரு கட்சியினரும் தேர்தல் தொடர்பான நிபை;பாட்டினை இறுதிவரை தெரிவிக்கவில்லை என்றும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement