• Aug 18 2025

மின்சார சபைக்கு இரண்டாவது காலாண்டில் ரூ.5.3 பில்லியன் இலாபம்!

Chithra / Aug 17th 2025, 11:25 am
image

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 5.31 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எனினும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 34 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்திருந்தது.

இரண்டு முறை மின்சார கட்டணக் குறைப்புகளுக்குப் பின்னர் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டு வருமானம் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

அதற்கமைய, வருவாய் 93 பில்லியன் ரூபாவிலிருந்து 98 பில்லியன் ரூபாயாக உயர்ந்தது.

மேலும் செலவுகள் 112 பில்லியன் ரூபாவியிலிருந்து இருந்து 92 பில்லியன் ரூபாவாகக் கடுமையாகக் குறைந்தது.

இதனிடையே, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, இலங்கை மின்சார சபை 13.1 பில்லியன் ரூபாய் இழப்பைப் பதிவு செய்துள்ளது.

மின்சார சபைக்கு இரண்டாவது காலாண்டில் ரூ.5.3 பில்லியன் இலாபம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 5.31 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.எனினும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 34 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்திருந்தது.இரண்டு முறை மின்சார கட்டணக் குறைப்புகளுக்குப் பின்னர் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டு வருமானம் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.அதற்கமைய, வருவாய் 93 பில்லியன் ரூபாவிலிருந்து 98 பில்லியன் ரூபாயாக உயர்ந்தது.மேலும் செலவுகள் 112 பில்லியன் ரூபாவியிலிருந்து இருந்து 92 பில்லியன் ரூபாவாகக் கடுமையாகக் குறைந்தது.இதனிடையே, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, இலங்கை மின்சார சபை 13.1 பில்லியன் ரூபாய் இழப்பைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement