• Apr 27 2024

நீர்மின் உற்பத்தி வருமானம் வருட இறுதியில் அதிகரித்தால் மின்கட்டண திருத்தம்..! அமைச்சர் காஞ்சன அறிவிப்பு samugammedia

Chithra / Nov 26th 2023, 8:03 am
image

Advertisement

 

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு இலாபம் கிடைக்குமாயின் அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நீர்த்தேக்கங்களில் நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாலும், முழு கொள்ளளவிற்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாலும் இந்த மாதமும் இதே அளவு வருமானம் அல்லது அதை விட அதிகமாக எதிர்பார்க்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னறிவித்தபடி டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வறட்சி நிலவினால் மேலதிக வருமானம் பயன்படுத்தப்படும்.

எவ்வாறாயினும், மின்சார சபைக்கு ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 12 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

டிசம்பர் 31 ஆம் திகதி இருப்புநிலைக் குறிப்பை இறுதிசெய்த பிறகு, மேலதிக வருமானம் இருந்தால், அமைச்சரவைக்கு அறிவித்து விலை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பேன், என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீர்மின் உற்பத்தி வருமானம் வருட இறுதியில் அதிகரித்தால் மின்கட்டண திருத்தம். அமைச்சர் காஞ்சன அறிவிப்பு samugammedia  மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு இலாபம் கிடைக்குமாயின் அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.நீர்த்தேக்கங்களில் நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாலும், முழு கொள்ளளவிற்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாலும் இந்த மாதமும் இதே அளவு வருமானம் அல்லது அதை விட அதிகமாக எதிர்பார்க்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.முன்னறிவித்தபடி டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வறட்சி நிலவினால் மேலதிக வருமானம் பயன்படுத்தப்படும்.எவ்வாறாயினும், மின்சார சபைக்கு ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 12 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.டிசம்பர் 31 ஆம் திகதி இருப்புநிலைக் குறிப்பை இறுதிசெய்த பிறகு, மேலதிக வருமானம் இருந்தால், அமைச்சரவைக்கு அறிவித்து விலை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பேன், என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement