இலத்திரனியல் விசா முறை மூலம் தென்கொரியாவிற்கு பணியாளர்களை அனுப்புவது குறித்து மேலும் ஆய்வு செய்யவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.
எவ்வாறாயினும், இலத்திரனியல் விசா முறையின் மூலம் பணிக்காக கொரியா செல்வதற்கு வீசா மறுக்கப்பட்ட குழுவொன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
இதன்போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன், காவல்துறையினர் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட கலந்துரையாடலில் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, பொது முகாமையாளர் டி.டி.பி. சேனநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
இலத்திரனியல் விசாவால் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி; அரசு எடுத்த நடவடிக்கை இலத்திரனியல் விசா முறை மூலம் தென்கொரியாவிற்கு பணியாளர்களை அனுப்புவது குறித்து மேலும் ஆய்வு செய்யவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.எவ்வாறாயினும், இலத்திரனியல் விசா முறையின் மூலம் பணிக்காக கொரியா செல்வதற்கு வீசா மறுக்கப்பட்ட குழுவொன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.இதன்போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன், காவல்துறையினர் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.இவ்வாறான பின்னணியில், குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.இந்த விசேட கலந்துரையாடலில் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, பொது முகாமையாளர் டி.டி.பி. சேனநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.