புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் காட்டு யானையொன்று கால் உடைந்த நிலையில் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட கூர்க்கெட்டியாவ பகுதியில் தனியார் ஒருவரின் காணியிலேயே குறித்த யானை காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
அத்துடன் குறித்த யானையின் பின் கால்கள் இரண்டும் உடைந்திருக்கலாமென வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சந்தேகித்துள்ளதுடன் அந்த யானைக்கு சிகிச்சையளிப்பதற்கு மிருக வைத்தியர் வரவழைக்கப்பட உள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானைக்கு சுமார் 30 வயது என மதிக்கப்பட்டுள்ளது
கால் உடைந்த நிலையில் காணப்படும் யானை.samugammedia புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் காட்டு யானையொன்று கால் உடைந்த நிலையில் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட கூர்க்கெட்டியாவ பகுதியில் தனியார் ஒருவரின் காணியிலேயே குறித்த யானை காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் அத்துடன் குறித்த யானையின் பின் கால்கள் இரண்டும் உடைந்திருக்கலாமென வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சந்தேகித்துள்ளதுடன் அந்த யானைக்கு சிகிச்சையளிப்பதற்கு மிருக வைத்தியர் வரவழைக்கப்பட உள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.குறித்த காட்டு யானைக்கு சுமார் 30 வயது என மதிக்கப்பட்டுள்ளது