• Apr 30 2024

கின்னஸ் சாதனை படைக்கவுள்ள எலி : இப்படியும் ஒரு விஷயம் இருக்கா!

Sharmi / Feb 3rd 2023, 11:21 am
image

Advertisement

கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது.

இந்த எலியே, இதுவரை உலகில் வாழ்ந்த எலிகளில் அதிக வயதுடைய எலி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த எலி தொடர்பான விஷயங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பசிபிக் பாக்கெட் எலி இப்போது உலகிலேயே மிக வயதான எலி என்று நம்பப்படுகிறது. உலகிலேயே மிகவும் அதிக நாள் வாழ்ந்த எலி என்று நம்பப்படும் பசிபிக் பாக்கெட் எலிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைக்கப் போவதாக சான் டியாகோ உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013ம் ஆண்டு ஜூலை 12ம் திகதியன்று உயிரியல் பூங்காவில் பிறந்த எலிக்கு, நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் நினைவாக பாட் என்று பெயரிடப்பட்டது. இந்த சிறப்பான எலியின் நீண்ட ஆயுளைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 8 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தப்போவதாக வனவிலங்குக் கூட்டமைப்பு கூறியது.

மனிதப் பராமரிப்பில் வாழும் பழமையான எலி என்ற கின்னஸ் உலக சாதனையும் இந்த எலி பெறும் என்று கூறப்படுகிறது. இந்த எலியின் வயதை சரிபார்க்க புறுசு நடுவர் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

பசிபிக் பாக்கெட் மவுஸ் என்பது வட அமெரிக்காவில் உள்ள எலிகளின் மிகச்சிறிய இனமாகும், அருகி வரும் இந்த இனத்தின் வீழ்ச்சியை ஈடுசெய்ய உதவும் வகையில் 2012 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலையானது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை நிறுவியது.

கின்னஸ் சாதனை படைக்கவுள்ள எலி : இப்படியும் ஒரு விஷயம் இருக்கா கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது.இந்த எலியே, இதுவரை உலகில் வாழ்ந்த எலிகளில் அதிக வயதுடைய எலி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த எலி தொடர்பான விஷயங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பசிபிக் பாக்கெட் எலி இப்போது உலகிலேயே மிக வயதான எலி என்று நம்பப்படுகிறது. உலகிலேயே மிகவும் அதிக நாள் வாழ்ந்த எலி என்று நம்பப்படும் பசிபிக் பாக்கெட் எலிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைக்கப் போவதாக சான் டியாகோ உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.2013ம் ஆண்டு ஜூலை 12ம் திகதியன்று உயிரியல் பூங்காவில் பிறந்த எலிக்கு, நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் நினைவாக பாட் என்று பெயரிடப்பட்டது. இந்த சிறப்பான எலியின் நீண்ட ஆயுளைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 8 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தப்போவதாக வனவிலங்குக் கூட்டமைப்பு கூறியது.மனிதப் பராமரிப்பில் வாழும் பழமையான எலி என்ற கின்னஸ் உலக சாதனையும் இந்த எலி பெறும் என்று கூறப்படுகிறது. இந்த எலியின் வயதை சரிபார்க்க புறுசு நடுவர் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.பசிபிக் பாக்கெட் மவுஸ் என்பது வட அமெரிக்காவில் உள்ள எலிகளின் மிகச்சிறிய இனமாகும், அருகி வரும் இந்த இனத்தின் வீழ்ச்சியை ஈடுசெய்ய உதவும் வகையில் 2012 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலையானது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை நிறுவியது.

Advertisement

Advertisement

Advertisement