உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு தனது அமைச்சரவையில் பதவி வழங்குவதாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை பகிரங்கமாக ஆதரிப்பதாக தெரிவித்ததுடன், அவருக்கு 4.5 கோடி டொலர் தேர்தல் நிதி கொடுப்பதாகவும் அறிவித்தார்.
இதனிடையே, யார்க், பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பிரச்சார நிகழ்வைத் தொடர்ந்து டொனால்ட் டிரம் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், எலான் மஸ்க்கை "மிகவும் புத்திசாலியான பையன்" என்று விவரித்தார்.
இவ்வாறாக இருவருக்குமிடையில் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையில், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய டிரம்ப்,
'ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ கொடுப்பேன்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, டொனால்ட் டிரம்ப்பை பகிரங்கமாக ஆதரித்த எலான் மஸ்க், அமைச்சர் பதவி வாய்ப்பை ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்து இதுவரை நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
இருப்பினும், எக்ஸ் தளத்தில் அவரது அவரது இடுகை எதிர்கால டிரம்ப் நிர்வாகத்தில் அவரது சாத்தியமான ஈடுபாடு குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க்கிற்கு காத்திருக்கும் அமைச்சர் பதவி- பரபரப்பாகும் அமெரிக்க தேர்தல் களம். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு தனது அமைச்சரவையில் பதவி வழங்குவதாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.எலான் மஸ்க் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை பகிரங்கமாக ஆதரிப்பதாக தெரிவித்ததுடன், அவருக்கு 4.5 கோடி டொலர் தேர்தல் நிதி கொடுப்பதாகவும் அறிவித்தார்.இதனிடையே, யார்க், பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பிரச்சார நிகழ்வைத் தொடர்ந்து டொனால்ட் டிரம் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், எலான் மஸ்க்கை "மிகவும் புத்திசாலியான பையன்" என்று விவரித்தார்.இவ்வாறாக இருவருக்குமிடையில் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையில், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய டிரம்ப்,'ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ கொடுப்பேன்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, டொனால்ட் டிரம்ப்பை பகிரங்கமாக ஆதரித்த எலான் மஸ்க், அமைச்சர் பதவி வாய்ப்பை ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்து இதுவரை நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், எக்ஸ் தளத்தில் அவரது அவரது இடுகை எதிர்கால டிரம்ப் நிர்வாகத்தில் அவரது சாத்தியமான ஈடுபாடு குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.