• Sep 20 2024

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி...!

Sharmi / Aug 14th 2024, 8:39 am
image

Advertisement

செஞ்சோலை வளாகத்தில் விமானப் படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம்(14) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு-வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலி  நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகன் , இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும்  கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.


செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி. செஞ்சோலை வளாகத்தில் விமானப் படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம்(14) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு-வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.இதன்போது, உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.குறித்த அஞ்சலி  நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகன் , இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும்  கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement