• May 20 2024

வைத்தியசாலையில் தாதி ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர்..! samugammedia

Chithra / Nov 28th 2023, 1:00 pm
image

Advertisement

 

காலி - உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

குறித்த நபர் உடுகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.   

மேலும் கைது செய்யப்பட்ட நபர் உடுகம வைத்தியசாலையின் ஊழியராக கடமை புரியும் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட தாதி குளியலறையில் ஆடை மாற்றும் போது காணொளி எடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், 

சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


வைத்தியசாலையில் தாதி ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர். samugammedia  காலி - உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் உடுகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.   மேலும் கைது செய்யப்பட்ட நபர் உடுகம வைத்தியசாலையின் ஊழியராக கடமை புரியும் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.குறிப்பிட்ட தாதி குளியலறையில் ஆடை மாற்றும் போது காணொளி எடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement