மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஹோர்முஸ் நீரிணை நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
போர் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டது.
இதனால் எண்ணெய்க்கப்பல்கள், எரிவாயுக் கப்பல்கள் என அனைத்து நாடுகளின் கப்பல்களும் செல்ல வழியில்லமால் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டன.
ஹோர்மூஸ் நீரிணையால் கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு உலக நாடுகளின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியது.
இந்தப் பின்னணியில் போர் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் மூலம் ஈரான் தனது மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க - ஈரான் ஒப்பந்தம் மீண்டும் தொடங்கியதால் மசகு எண்ணெய் விலை சரியத்தொடங்கியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
3 மாதங்களின் நெருக்கடிக்கு முடிவு - திறக்கப்படும் ஹோர்மூஸ் நீரிணை மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஹோர்முஸ் நீரிணை நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.போர் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் எண்ணெய்க்கப்பல்கள், எரிவாயுக் கப்பல்கள் என அனைத்து நாடுகளின் கப்பல்களும் செல்ல வழியில்லமால் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டன. ஹோர்மூஸ் நீரிணையால் கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு உலக நாடுகளின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியது. இந்தப் பின்னணியில் போர் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் ஈரான் தனது மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி விற்பனை செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க - ஈரான் ஒப்பந்தம் மீண்டும் தொடங்கியதால் மசகு எண்ணெய் விலை சரியத்தொடங்கியுள்ளது.இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.