• Sep 19 2024

திருமலை தோப்பூர் கிராமத்திற்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்..!samugammedia

Sharmi / Jun 14th 2023, 2:01 pm
image

Advertisement

திருகோணமலை,தோப்பூர் -அப்ரார் நகர் கிராமத்திற்குள் இன்று புதன்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளன.

இதன்போது சுமார் 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் முறித்தும், தென்னை மர குருத்துக்களை சாப்பிட்டும் சேதப்படுத்தியுள்ளன.அத்தோடு பாதுகாப்பு வேலிகளுக்கும் சேதம் விளைவித்துள்ளன.

தாம் பல்வேறு கஷ்டப்பட்டு செய்த தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளமையால் தாம் நஷ்டமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட தமது தென்னைகளுக்கான நஷ்ட ஈட்டினை பெற்றுத்தரவும், யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தரவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தோப்பூர் -அப்ரார் நகர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


திருமலை தோப்பூர் கிராமத்திற்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்.samugammedia திருகோணமலை,தோப்பூர் -அப்ரார் நகர் கிராமத்திற்குள் இன்று புதன்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளன.இதன்போது சுமார் 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் முறித்தும், தென்னை மர குருத்துக்களை சாப்பிட்டும் சேதப்படுத்தியுள்ளன.அத்தோடு பாதுகாப்பு வேலிகளுக்கும் சேதம் விளைவித்துள்ளன.தாம் பல்வேறு கஷ்டப்பட்டு செய்த தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளமையால் தாம் நஷ்டமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.இவ்வாறு காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட தமது தென்னைகளுக்கான நஷ்ட ஈட்டினை பெற்றுத்தரவும், யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தரவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தோப்பூர் -அப்ரார் நகர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement