• May 21 2024

சித்திரை புத்தாண்டு விளையாட்டுக்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை...!

Sharmi / Apr 9th 2024, 2:08 pm
image

Advertisement

சித்திரை புத்தாண்டு தினங்களில் இடம்பெறும் விளையாட்டு போட்டிகளில்  முட்டி உடைத்தல் மற்றும் குருடனுக்கு உணவளித்தல் ஆகிய விளையாட்டுக்களின் பெயர்களை மாற்ற சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(08)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், முட்டி உடைத்தல் போட்டியை அதிர்ஷ்ட பானையை உடைத்தல் எனவும், குருடனுக்கு உணவளித்தல் போட்டியை பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல் எனவும் பெயரை மாற்றி நடத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார். 

நுகர்வோருக்கு கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவுக்குத் தீர்வுகளை வழங்குவதே அரசாங்க பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட புத்தாண்டுக்காக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து நாடளாவிய ரீதியில் 1,089 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளன.

அதேநேரம், இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்து சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார் .

அதனடிப்படையிலே குறித்த விளையாட்டுக்களின் பெயரையும் அவர் மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

சித்திரை புத்தாண்டு விளையாட்டுக்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை. சித்திரை புத்தாண்டு தினங்களில் இடம்பெறும் விளையாட்டு போட்டிகளில்  முட்டி உடைத்தல் மற்றும் குருடனுக்கு உணவளித்தல் ஆகிய விளையாட்டுக்களின் பெயர்களை மாற்ற சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(08)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதனடிப்படையில், முட்டி உடைத்தல் போட்டியை அதிர்ஷ்ட பானையை உடைத்தல் எனவும், குருடனுக்கு உணவளித்தல் போட்டியை பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல் எனவும் பெயரை மாற்றி நடத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார். நுகர்வோருக்கு கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவுக்குத் தீர்வுகளை வழங்குவதே அரசாங்க பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த வருட புத்தாண்டுக்காக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து நாடளாவிய ரீதியில் 1,089 புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளன.அதேநேரம், இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்து சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார் .அதனடிப்படையிலே குறித்த விளையாட்டுக்களின் பெயரையும் அவர் மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement